படத்தில் இருப்பவர் ஃபார்வர்டுபிளாக் மாணவர் அணியின்(AISB) மத்தியக்குழு உறுப்பினர் தோழர் திவான் தமிழன் அவர்கள்.தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்.தோழருக்கு 21 வயது தான்.ஆனால் இவருடைய அரசியல் செயல்பாடுகளை பார்த்த யாரும் இவருக்கு 21 வயது என்பதை நம்பமாட்டார்கள்.அந்தளவிற்கு அரசியல் முதிர்ச்சியுடையவர்.எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் இயக்கத்தை முன்னிலைப்படுத்தி செயல்படுபவர்.இவரது சிந்தனை,செயல்பாடு என அனைத்துமே இயக்கத்தை முன்னிலைப்படுத்தி தான் உள்ளது.அதனால் தான் இவரது செயல்பாடுகளை எல்லாம் எனது முகநூல் பக்கத்தில் பதிவுசெய்து வந்தேன்.தோழரை நேரில் சந்திக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை.அந்த வாய்ப்பு ஃபார்வர்டுபிளாக் தேசிய கவுன்சில் கூட்டத்தின்போது கிடைத்தது.அப்போதுதான் தோழரை முதன்முதலில் சந்தித்தேன்.உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை நன்கு தெரிந்துவைத்துள்ளார்.நல்ல சிந்தனையாளராக உள்ளார்.தேனி மாவட்டத்தில் உழைக்கும் மக்களுக்கான குரலாக தோழர் திகழ்கிறார்.எந்த மாநிலமாக இருந்தாலும் சரி இயக்க ரீதியாக செயல்படுகிற ஃபார்வர்டுபிளாக் தோழர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களது செயல்பாடுகளை ஆதரிப்பேன்.தோழர் திவான் தமிழன் அவர்கள் இயக்க ரீதியாக,அரசியல் ரீதியாக வளர்ச்சி அடையவேண்டும்.தேனி மாவட்டத்தில் ஒரு மாபெரும் அரசியல் ஆளுமையாக தோழர் திவான் தமிழன் அவர்கள் உருவெடுக்க எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment