திருமணம் ஆகாமல் இருப்பது என்பது வேறு.பிரம்மச்சரிய வாழ்க்கையை கடைபிடிப்பது என்பது வேறு.அனைத்து தகுதிகளும் இருந்து தூய பிரம்மச்சரிய வாழ்க்கையை கடைபிடித்தவர்கள் நேதாஜியும்,தேவரும் மட்டும் தான்.நாடு கடந்து சென்று இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து வீர போர் புரிந்த மாவீரர் நேதாஜியை தீவிரவாதி என்று சிறுமைப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் அவரது பரிசுத்த தூய பிரம்மச்சரிய வாழ்க்கையையும்,அவரது தனி மனித ஒழுக்கத்தையும் சிறுமைப்படுத்துகின்ற வகையிலே அன்றைய காங்கிரஸ் செயல்பட்டது.நேதாஜிக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லாம் கால நீரோட்டத்தில் காணாமல் போய்விட்டார்கள்.நேதாஜி தூய பிரம்மச்சாரி என்பதையும்,அனிதா போஸ் என்ற பிம்பம் நேருவால் உருவாக்கப்பட்ட ஒரு போலி பிம்பம் என்பதையும் தலைவர் தேவர் அவர்கள் தொடர்ந்து கூறி வந்தார்.Marraige is not for me என்று நேதாஜி கூறியுள்ளார்.மேலும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பால சேனா படையை தொடங்கி வைத்து பேசுகின்ற போது,எனக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களையும் இந்த படையில் சேர்த்து விட்டிருப்பேன் என்று நேதாஜி கூறினார்.நேதாஜி எந்த வருடம் வெளிநாடு சென்றார்? அனிதா போஸ் பிறந்த வருடம்? அனிதா போஸின் தற்போதைய வயது? ஆகியவற்றை எல்லாம் ஒப்பீட்டு பார்த்தோம் என்றால் காங்கிரஸின் பித்தலாட்டம் நமக்கு தெரியும்.திருமணம் ஆகி குழந்தை இருந்தது என்றால் ஆமா எனக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது என்று நேதாஜியே கூறி இருப்பாரே? அதை சொல்கின்ற அளவிற்கு கூட தைரியம் இல்லாத கோழை அல்ல நேதாஜி.
V.K. Avinas
No comments:
Post a Comment