Saturday, March 21, 2020

ஸ்டாக் பழசு... விலையோ புதுசு!’- வணிக நிறுவனத்துக்கு அபராதம் விதித்த நெல்லை நுகர்வோர் நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவு நகல் https://bit.ly/2UurxvE CC/77/2018 Chokendra Pandian Vs The Manager, Saravana Selvarathinam, Dated 2020-02-24
-----------------------------
நெல்லை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவருபவர், சொக்கேந்திர பாண்டியன். அவர், கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி, நெல்லையில் உள்ள தனியார் கடையில் தீபஜோதி லேம்ப் ஆயில் வாங்கியுள்ளார். அதன் விலை 102 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் பேக்கிங் செய்யப்பட்டிருந்ததில், ரூ.95 எனக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், இந்தியாவிற்கு வெளியே விற்பனை செய்யும் விலையாக ரூ.100 என அச்சிடப்பட்டிருந்தது. ஆயில் நிறுவனம் குறிப்பிட்டிருக்கும் விலையைவிடவும் ஏழு ரூபாய் கூடுதலாக கடையில் வசூல்செய்திருப்பது பற்றி அந்தக் கடையின் மேலாளர் மற்றும் உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.
ஆனால், வணிக நிறுவனத்தினர் கூடுதலாக வசூலித்த பணத்தைத் திரும்பத் தராததால், நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்குத் தொடர்ந்தார். அதில், ``வழக்கறிஞராகப் பணியாற்றும் நான் சரவணா செல்வரத்தினம் கடையில் ஆயில் வாங்கினேன். அதில் குறிப்பிட்டிருந்த தொகையைவிட ஏழு ரூபாய் கூடுதலாக வணிக நிறுவனத்தின் சார்பில் எடுத்தார்கள்.
கூடுதலாக வசூலித்த ஏழு ரூபாயை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டதற்குத் தர மறுத்த வணிக நிறுவனத்தினர், கடைக்கு வந்திருந்த பொதுமக்கள் முன்னிலையில் என்னை அவதூறாகப் பேசினார்கள். என்னுடைய மரியாதைக்கும் மதிப்புக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதால், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன். என்னால் தொழிலில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது.
அதன் பின்னர், நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் நியமன அலுவலரை நேரில் சந்தித்து, எனக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாடு பற்றி முறையிட்டேன். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர், தன் கடமையை தட்டிக் கழித்துவிட்டு, `நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்துக்குச் சென்று முறையிடுங்கள்’ எனத் தெரிவித்தார்.
இதுபற்றி ஆயில் நிறுவனத்திடம் முறையிட்டேன். அந்த கம்பெனி சார்பாகப் பேசிய கஸ்டமர் சப்போர்ட் அலுவலர், `நாங்கள் எந்த ஸ்டிக்கரையும் ஒட்டவில்லை. நாங்கள் அச்சிட்டிருப்பதுதான் எங்களுடைய விலை. அதில் கடைக்காரர்கள் முறைகேடு செய்தால் நாங்கள் பொறுப்பல்ல’ என்று தெரிவித்ததுடன், `புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் பாக்கெட்டின் விலைக்கு பழைய ஸ்டாக்கை அந்த நிறுவனம் விற்றிருக்கிறது’ என்று தெரிவித்தார்.
அதனால் பழைய ஸ்டாக்கை புதிய விலைக்கு விற்பனை செய்து, வணிக நிறுவனம் என்னை ஏமாற்றியிருக்கிறது என்பதை அறிந்து, வணிக நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன். அவர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை. அதனால் நுகர்வோராகிய எனக்கு இந்த நீதிமன்றம் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட நுகர்வோர் மன்றத் தலைவர் தேவதாஸ், உறுப்பினர் முத்துலட்சுமி மற்றும் சிவமூர்த்தி ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதில், ``எதிர்தரப்பினர் செய்தது முறையற்ற வாணிபம். அதனால் வணிக நிறுவனத்தின் மேலாளரும் உரிமையாளரும், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.15,000 மும், வழக்குச் செலவுக்கு ரூ.5000 மும் வழங்க வேண்டும்.
மனுதாரரிடம் எம்ஆர்பி-யை விடவும் கூடுதலாக வசூலித்த ஏழு ரூபாயையும் சேர்த்து, மொத்தம் 20 ,007 ரூபாயை ஒரு மாத காலத்துக்குள் கொடுக்க வேண்டும். தவறினால், 6 சதவிகித வட்டியுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.
Source: vikatan
-------------------
எம்.ஆர்.பி-யைவிட அதிகவிலைக்கு பொருள் விற்பனை! சரவணா செல்வரத்தினம் கடைக்கு அபராதம்:
https://www.facebook.com/trduraikamaraj/posts/1280040118806536
-----------------
ரூ.7 -க்கு 7 ஆயிரம் அபராதம்! கடையை அதிரவைத்த நீதிமன்றம்!
https://www.facebook.com/trduraikamaraj/posts/1581750631968815
-------------
நெல்லை வழக்கறிஞர் அ.பிரம்மா அவர்கள் வெற்றி கண்ட சில நுகர்வோர் குறைதீர் வழக்குகளின் தொகுப்பு:
https://www.facebook.com/trduraikama…/posts/1325266607617220


No comments: