Tuesday, June 28, 2011

போலீஸ் நடவடிக்கை என்ன


வாடகை பிரச்சினை தொடர்பாக வரும் புகார்களை போலீசார் கடுமையாக கையாள முடியாது. அது சிவில் பிரச்சினையாக இருப்பதால், பலர் நாங்கள் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறோம் என்பார்கள். ஒரு சிலர் பேசி முடித்துக் கொள்ளலாம் என்று கூறுவதுண்டு. இவர்களிடம் மட்டும் போலீசார் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி விடுவார்கள்.


வாடகைக்கு இருப்பவர் இத்தனை மாதங்களில் நான் காலி செய்து விடுகிறேன் என்று எழுதிக் கொடுத்து விட்டு சொன்னபடி நடக்காவிட்டாலும் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. வாடகைக்கு இருக்கும் ஒருவரின் வீட்டில் அவரது அனுமதியின்றி வீட்டின் உரிமையாளர் நுழைந்தாலும் அது சட்டப்படி குற்றமாகும்.

இது போன்ற நேரங்களில் "அத்துமீறி நுழைந்தால் வீட்டு உரிமையாளர் மீது போலீசாரால் வழக்குப்பதிவு செய்ய முடியும். இந்த வாடகை பிரச்சினை அடிதடி தகராறில் முடிந்தால் யார் மீது தவறு இருக்கிறதோ அவரை கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் உள்ளது.
மற்றபடி வீட்டை காலி செய்து கொடுக்க போலீசுக்கு அதிகாரம் இல்லை.

இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- "சிவில் மேட்டர்களில் பொதுவாக போலீசார் தலையிட முடியாது. வீட்டு உரிமையாளர்கள்தான் வாடகைக்கு இருப்பவர்கள் வாடகையும் தருவதில்லை. காலி செய்யவும் மறுக்கிறார்கள் என்று புகார் கொடுப்பார்கள்.
இதுபோன்ற நேரங்களில் வாடகைக்கு இருப்பவரை அழைத்து பேசி பிரச்சினையை தீர்த்து வைக்க முயற்சி செய்வோம். இது முடியாத பட்சத்தில் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விடுவோம் என்றார்.

No comments: