‘அனேகன்’ படத்தின் வெற்றியால் உற்சாகமாக இருக்கும் கார்த்திக் தற்போது ‘அமரன்’ படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’ நிருபரிடம் அவர் கூறியதாவது:
‘அமரன் பார்ட் 2’ தொடர்பாக நானும் இயக்குநர் ராஜேஷ்வரும் பேசி வருகிறோம். இந்தப் படம் பிரம்மாண்ட தயாரிப்பாக இருக்கும். ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
அதுபற்றிய அறிவிப்பை அடுத்த வாரம் நாங்கள் முறைப்படி வெளியிடுவோம். இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை பாடவுள்ளேன். பாட்டு மட்டுமின்றி நீங்கள் எதிர்பார்க்காத இன்னொரு சஸ்பென்ஸும் அந்தப் படத்தில் இருக்கும்.
‘அமரன் பார்ட் 2’ படத்துக்கு முன்பு ராஜேஷ்வர் தனது மகன் ரஞ்சனை வைத்து ஒரு படம் செய்யவுள்ளார். ரஞ்சன் ஏற்கெனவே ‘அமரன்’ படத்தில் சிறுவன் வேடத்தில் நடித்தவர்.
ரஞ்சன் நடிக்கும் படத்திலும் நான் ஒரு பாடலைப் பாடவுள்ளேன்.
இவ்வாறு கார்த்திக் கூறினார்.
No comments:
Post a Comment