Wednesday, March 4, 2015

வக்கிரம்

கு.செந்தில் மள்ளர் என்பவர் "தென்பாண்டி வேந்தர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு" என்ற ஒரு சிறு நூல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகிறார்,"தனது வகுப்புத் தோழரான பசும்பொன் முத்துராமலிங்கம் முக்குலத்தோர் சங்கம் கூட்டிய போது தலைவர் பாலசுந்தரராசுவும்,தளபதி செந்தூரனும் முத்துராமலிங்கத்திடம் சென்று "கள்ளர்,மறவர்,அகமுடையாரோடு பள்ளர்,பறையரையும் சேர்த்து அய்ங்குலத்தோர் சங்கமாக தொடங்குங்கள் என அன்றே தமிழ்த் தேசிய ஓர்மைக்கு வித்திட்டனர் ஆனால் அதற்கு முத்துராமலிங்கம் இது சரிப்பட்டு வராது என சரியான காரணங்களைக் கூறாது மறுத்து விட்டார்." என்று எழுதிஉள்ளார். மேற்படி நூல் ,பக்கம் 4, வெளியீடு மண்ணுரிமை.
வரலாறு 2: முக்குலத்தோர் சங்கத்தை தொடங்கியதிலோ அதன் செயல்பாடுகளிலோ பசும்பொன் தேவர் அவர்களுக்கு இம்மியளவும் தொடர்பு கிடையாது. முக்குலத்தோர் சங்கம் 1934 ஆம் ஆண்டு சிவணாண்டி சேர்வை,.ராமநாதபுரம் இளைய சேதுபதி ராஜாராம் பாண்டியன்,சேத்தூர் சமீந்தார் சேவுக பாண்டியத் தேவர்,பட்டுக்கோட்டை நாடி முத்து பிள்ளை,பூண்டி வாண்டையார்,கரந்தைக் கவியரசு தமிழவேள் உமா மகேஸ்வரன் பிள்ளை ஆகியோரால் தொடங்கப்பட்டது. தேசியவாதியான பசும்பொன் தேவர் அவர்களின் மீதான வக்கிரமான.,தவறான பதிவு இது.செந்தில் மள்ளர் தன்னுடைய கூற்றை நிரூபித்தால் பத்து இலட்சம் பரிசு வழங்கப்படும்.இல்லையென்றால் நேர்மைத்திறம் இருந்தால் அந்தப் பகுதியை நீக்க வேண்டும்..பார்ப்போம்

No comments: