அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் நடந்தது.
பொதுக்குழு கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, பொருளாளர் எஸ்.ஆர்.தேவர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 750–க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் கட்சி தலைவராக டாக்டர் சேதுராமன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
* தேசிய அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் சாதிவாரி விவரங்களை வெளியிடாததை கண்டிக்கிறோம். தமிழகத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் போன்ற பிரிவுகளை ஒருங்கிணைந்து தேவரினம் என்ற ஒரே தொகுப்பாக வெளியிட வேண்டும்.
* மாமன்னன் புலித்தேவன் 300–வது பிறந்த நாள் விழாவை செப். 1–ந் தேதி நெல்லையில் நடத்திட பொதுக்குழு அங்கீகரிக்கிறது.
* ஆர்.கே.நகர் தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறது.
* 2016 சட்டமன்ற தேர்தலில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் அரசியல் அங்கீகாரம் பெறும் வகையில் தேர்தலில் போட்டியிடுவது என்றும், இதில் அனைத்து முடிவுகள் எடுக்க நிறுவன தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது.
* பசும்பொன்னில் நிரந்தர அன்னதான மண்டபம் அக்டோபர் 30–ந் தேதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் திரளாக பங்கேற்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவில் மா.குருசாமி, செந்தில், சுப்பையன், முத்துசாமி, முத்துராமலிங்க தேவர், சுப்பிரமணியன், மணிவேல், ராமமூர்த்தி உள்பட பலர் பேசினார்கள்.
No comments:
Post a Comment