Wednesday, July 22, 2015

சிவாஜி ஒரு சகாப்தம் :- THANKS - MARUTHU TV

விழுப்புரம் சின்னையாகணேசன் என்பது இவரது இயற்பெயர். சிவாஜி கணேசன் அவர்கள் முக்குலத்தோர் சமுகத்தை சார்ந்தவர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
‘சிவாஜி’ கணேசன், சின்னையா மன்றாயர் – ராஜாமணி அம்மாள் ஆகியோரு க்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.
‘சிவாஜி’ கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடைநாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனி ன் நடிப்புத் திறனை மெச்சிய ஈ.வே.ராமசாமி, அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
‘சிவாஜி’ கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத் திலும் நடித்துள்ளார். நல்ல குரல் வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத்திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார்.
இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்தமாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கி யிருந்தார்.
திரைதுறையில் பல்வேறு நட்சத்திரங்கள் மின்னினாலும் ஒரே சூரியனாக திகலும் சிவாஜி கனேசன் அவர்களுக்கு நமது நினைவஞ்சலி...

No comments: