விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘இது என்ன மாயம்’.
இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
மேலும் அம்பிகா, ராதிகா உள்ளிட்டோர் பலர் இப்படத்தில் முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரொமான்டிக் மற்றும் பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் வழங்கியுள்ள இப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளது.
அன்றைய தினத்தில் விக்ரம் பிரபுவின் அப்பாவான பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சகலகலா வல்லவன் அப்பாடக்கர்’ படம் வெளியாகவுள்ளது. இதில் ஜெயம் ரவி, சூரி, திரிஷா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மேலும் அதே தினத்தில் விக்ரம் பிரபுவின் தாத்தாவும் பிரபுவின் அப்பாவுமான சிவாஜி நடித்த ‘கட்டபொம்மன்’ டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ் செய்யவுள்ளனர்.
ஒரே நாளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று திலகங்களின் படங்கள் வெளியாவது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment