நாட்டுப்புற பாடகியும், சினிமா நடிகையுமான பரவை முனியம்மாவின்
மருத்துவச் செலவை ஏற்பதாக, நடிகர் விஷால் கூறியுள்ளார்.பரவை முனியம்மா, 72,
'துாள், வீரம், மான் கராத்தே' உட்பட 25 தமிழ் சினிமாக்களில்
நடித்துள்ளார். 'துாள்' படத்தில், இவர் பாடிய 'சிங்கம் போல...' என்ற
பாடல், பட்டி தொட்டியெல்லாம் பிரபலம் அடைந்தது. சினிமா வாய்ப்புகள்
படிப்படியாக குறைந்து, வருமானம் இல்லாமல் தவித்தார். உடல் நலமும்
பாதிக்கப்பட்டது. இதனால் முன்போல, திருவிழா கச்சேரிகளுக்கும் செல்ல
முடியவில்லை. மருத்துவச் செலவுக்குக் கூட, பணம் இல்லாமல் மிகுந்த
சிரமத்தில் இருக்கிறார்.இந்த தகவல், நடிகர் விஷாலுக்கு தெரிய வந்தது. உடனே,
பரவை முனியம்மாவுடன் போனில் பேசினார். உடல்நலம் குறித்து விசாரித்த
விஷால், மருத்துவச்
செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறார்.இதையடுத்து, பிரபல மருத்துவமனையில், பரவை முனியம்மா சிகிச்சை எடுக்க முடிவு செய்துள்ளார்.
செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறார்.இதையடுத்து, பிரபல மருத்துவமனையில், பரவை முனியம்மா சிகிச்சை எடுக்க முடிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment