நடிகரும், நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான கார்த்திக் இன்று
பிறந்திருக்கும் புத்தாண்டு தினம் மக்களுக்கு நன்மையை வழங்க வேண்டும் என்று
தனது வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார்.
இன்று பிறந்திருக்கும் புத்தாண்டு தினத்திற்கு தலைவர்கள் பலரும் தங்கள்
வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்திக்கும்
தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
Karthik said his New Year Wishes
2015 ம் ஆண்டு போல இல்லாமல் இந்த 2016 ம் நல்லதொரு ஆண்டாக இருக்கட்டும்
என்று கூறியிருக்கும் கார்த்திக் மக்களின் பிரச்சினைகள் குறித்தும்
பேசியிருக்கிறார்.
எத்தனை பிரச்சினைகள்
2015ம் ஆண்டில் மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, சகிப்புத்தன்மை
விவகாரம், நாட்டில் ஊடுருவும் பிரிவினைவாதிகள் என்று எவ்வளவோ பிரச்சினைகளை
மக்கள் சந்தித்தனர். 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானம் வளர்ந்தும் நமது மக்கள்
என்றும் கண்டிராத ஒரு துயரத்தை சுமக்க நேர்ந்திருக்கிறது.இயற்கை என்றுமே
மனித குலத்திற்கு ஒரு விந்தையாகவும், படிப்பினையாகவும் இருக்கின்றது.
பொறுப்பில் இருப்பவர்களுக்கு
சமீபத்தில் பெய்த பெருமழையின் போது மக்கள் சாதி, மதம் பாராமல்
ஒருவருக்கொருவர் உதவிகள் புரிந்தனர். மக்கள் புரிந்த இந்த சேவை, பொறுப்பில்
இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது.இந்த அவல நிலை தொடர்ந்து நடக்கும்
பட்சத்தில் மக்கள் கொதித்து எழுவர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
வரும் தேர்தல்
வரும் சட்டமன்றத் தேர்தல் ஒரு பாடமாக அமையும். அனைத்து தரப்பு மக்களும்
இந்த ஆண்டில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதே உண்மை.இந்தப் புத்தாண்டில்
மக்கள் புதிய உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக
நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும்.
இந்தப் புத்தாண்டில்
இன்று பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டில் பொதுமக்கள் தங்கள் வாழ்வில்
எழுச்சிமிக்க ஒரு சரித்திரம் படைக்க வேண்டும். மேலும் விழிப்புடன்
செயல்பட்டு மக்கள் இந்த ஆண்டில் வெற்றிகளைப் பெற்றிட வேண்டும் என்று மனமார
வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என்று
கார்த்திக் தெரிவித்து இருக்கிறார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karthik-said-his-new-year-wishes-243566.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karthik-said-his-new-year-wishes-243566.html
No comments:
Post a Comment