Sunday, January 3, 2016

நேதாஜி குறித்த புதிய ஆவணங்கள்:வெளியிட்டது லண்டன் இணையதளம்

லண்டனில் இருந்து இயங்கிவரும் இணையதளமான "போஸ்ஃபைல்ஸ்.இன்ஃபோ' (www.bosefiles.info), நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான புதிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 1952-ஆம் ஆண்டில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நேதாஜி வாழ்ந்தார் எனக் கூறப்பட்டு வரும் தகவல் தவறானது என்பதை நிரூபிக்கவே இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளதாக அந்த இணையதள நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 1945-ஆம் ஆண்டு, தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பலியானதாக, அவரது மரணம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரது தீவிர ஆதரவாளரான எஸ்.எம்.கோஸ்வாமி, "நேதாஜி குறித்த மர்மம் விலகியது' என்ற தலைப்பில், கடந்த 1955-ஆம் ஆண்டு நாடு முழுவதும் துண்டுப் பிரசுரம் ஒன்றை விநியோகித்தார்.
அதில், மங்கோலிய நாட்டைச் சேர்ந்த வர்த்தகப் பிரதிநிதிகளுடன் சீன அதிகாரிகள் சந்திக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. "கடந்த 1952-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் சுபாஷ் சந்திரபோஸூம் இடம் பெற்றுள்ளார்; எனவே அவர், சீனாவில் வாழ்ந்து வருகிறார்' என்று கோஸ்வாமி தெரிவித்திருந்தார். மேலும் அந்த புகைப்படத்தை அவர், நேதாஜி குறித்து விசாரணை நடத்திய குழுவிடம் 1956-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கவும் செய்தார். நேதாஜி தொடர்பாக அவர் தெரிவித்த தகவல்களும், அவரது மரணம் தொடர்பாக 1945-ஆம் ஆண்டு அறிக்கையில் இடம்பெற்றிருந்த தகவல்களும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய அரசுகக்கு அனுப்பிய தந்தியில் இடம்பெற்றிருந்த தகவலை, போஸ்ஃபைல்ஸ்.இன்ஃபோ இணையதளம் சனிக்கிழமை வெளியிட்டது.
அதில், "சுபாஷ் சந்திரபோஸ் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் புகைப்படத்தில் இருப்பவர், பிகிங் மருத்துவக் கல்லூரியின் கண்காணிப்பாளராக இருந்த லீ கி ஹுங் ஆவார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த பத்திரிகையாளரும்,போஸ்ஃபைல்ஸ்.இன்ஃபோ' இணையதள நிறுவனருமான ஆசிஷ் ராய் கூறுகையில் "எங்கள் இணையதளம் தற்போது வெளியிட்டுள்ள ஆவணத்தின் மூலம், கடந்த 70 ஆண்டுகளாக நேதாஜி குறித்து நிலவிய வந்த தகவல் தவறானது என்பது வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது' என்று தெரிவித்தார்.
கடந்த 1945-இல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரஷியாவுக்குத் தப்பியோடினார் என்று கூறப்பட்டு வரும் தகவலும் தவறானது என்பதை நிரூபிக்கும் விதத்தில், கடந்த மாதம் 7-ஆம் தேதி, இந்த இணையதளத்தில் ஆவணங்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்க

No comments: