Sunday, January 24, 2016

நேதாஜிக்கு "தேசத் தலைவர்' பட்டம்: மம்தா பானர்ஜி கோரிக்கை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு "தேசத்தின் தலைவர்' என்ற பட்டம் கொடுக்கப்பட வேண்டும் என்று மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார்.
 இதுதொடர்பாக மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நேதாஜியின் 119ஆவது பிறந்த தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் பேசியது:
 நேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது. நமது நாட்டை விட்டு நேதாஜி வெளியேறினார். ஆனால், அதன்பிறகு அவர் என்னவானார் என்பது நமக்கு இன்னமும் தெரியாது. நேதாஜிக்கு "தேசத்தின் தலைவர்' பட்டம் அளிக்கப்பட வேண்டும். அந்தப் பட்டத்துக்கு தகுதியான நபர் அவர். நேதாஜி மாயமான விவகாரத்தில் உண்மைகளை இளைஞர்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்றார் மம்தா பானர்ஜி.
 சுட்டுரையில் மரியாதை: முன்னதாக, நேதாஜியின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சுட்டுரையில் (டுவிட்டர்) மம்தா பானர்ஜி பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

No comments: