Thursday, August 15, 2013

ஐ.ஜி. தாமரைக்கண்ணன் உள்பட 24 பேருக்கு குடியரசு தலைவர் காவல் பதக்கம்


புகைப்படங்கள் தமிழக காவல் துறையில் சீர்மிகு பணியாற்றியதற்காக கூடுதல் டிஜிபிக்கள் கரண் சின்ஹா, ஆர்.சி. குடவாலா, சென்னை பெருநகரக் கூடுதல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல சிறப்பாகப் பணியாற்றி வரும் இரண்டு டிஐஜிக்கள், நான்கு துணை காவல் கண்காணிப்பாளர்கள், எட்டு ஆய்வாளர்கள், நான்கு உதவி ஆய்வாளர்கள், மூன்று தலைமைக் காவலர்கள் ஆகியோருக்கு சிறப்புப் பணிக்கான காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு (அடைப்புக்குறிக்குள் பதவி): சீர்மிகு பணிக்கான குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் பெறுவோர்: கரண் சின்ஹா (கூடுதல் டிஜிபி, குற்றப் புலனாய்வுத் துறை). ஆர்.சி. குடவாலா (கூடுதல் டிஜிபி, தமிழ்நாடு தீயணைப்புத் துறை), பி. தாமரைக்கண்ணன் (சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர்). சிறப்புப் பணி பதக்கம் (அடைப்புக்குறியில் இடம்) டிஐஜி: எஸ். முருகன், (விழுப்புரம் சரகம்). பி. நாகராஜன் (சென்னை தலைமையகம்) டிஎஸ்பி: கே. சந்திரசேகரன் (கியூ பிரிவு), ஏ. பால்ரங்கன் (ஒருங்கிணைந்த குற்றபுலனாய்வு பிரிவு), கே. சங்கர் (வேலூர் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு), எம். பாலசுப்பிரமணியன் (வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு), ஆய்வாளர்கள்: ஆர். ரவிகுமார் (சென்னை சிபிசிஐடி), எம். தங்கராஜ் (எஸ்.பி.சி.ஐ.டி.), பி.ஏ. உதயகுமார் (சென்னை பாதுகாப்பு பிரிவு), ஏ. சோமசுந்தரம் (சென்னை சிபிசிஐடி), ஏ. வேணுகோபால் (சேலம் வணிக குற்றத் தடுப்புப் பிரிவு), ஏ.வி. ராமலிங்கம் (ஈரோடு கியூ பிரிவு), ஜி. கனகராஜ் (சென்னை பாதுகாப்பு சிஐடி), எம்.ஜி. முருகேசன் (மதுரை சிறப்புக் காவல் படையணி). உதவி ஆய்வாளர்கள்: ஆர். ராயப்பன் (ஈரோடு சிறப்பு அதிரடிப்படை), எஸ். முருகன் (தூத்துக்குடி மத்திய காவல் நிலையம்), திருவாய்மொழி பெருமாள் (நெல்லை மாநகர காவல்துறை குற்ற ஆவணங்கள் காப்பகம்), ஜி. விமலா (சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை). தலைமைக் காவலர்கள்: வி.காமராஜ் (தூத்துக்குடி நில மோசடி தடுப்புப் பிரிவு), ஆர்.பி. நாராயணன், கே. பாலசுப்பிரமணியன் (சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை). சிறைத்துறையினருக்கு விருது: இதேபோல சிறைத்துறையில் புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளி உதவி ஜெயிலர் ஆர்.ஆனந்தராவ், வேலூர் சிறப்பு பெண்கள் சிறை தலைமை வார்டர் டி.தனலட்சுமி,புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்தப்பள்ளி முதல்நிலை வார்டர் பி.திருஞானசம்பந்தம்,திருத்துறைபூண்டி இரண்டாம் நிலை வார்டர் பி.நாராயணசாமி ஆகியோருக்கும் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதேபோல தீயணைப்புத்துறையினருக்கு சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

No comments: