Thursday, August 1, 2013

திருச்சியில் நாளை பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ பேட்டி


தூத்துக்குடியில் இன்று ம.தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியளிப்பு விழா நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அவரிடம் தேர்தல் நிதியாக ரூ.67 லட்சத்து 12 ஆயிரம் வழங்கப்பட்டது.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்காக ம.தி.மு.க. பாடுபட்டு வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் தேர்தல் நிதியை வாரி வழங்கி வருகின்றனர். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்பட இருக்கிறது. அதில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டு வருகிறது. எனவே நாளை திருச்சி வருகை தரும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிராக எனது தலைமையில் விமான நிலையத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சேது சமுத்திரம் திட்டத்தை மீனவர்களின் ஒப்புதலோடு நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் கொலை சம்பவங்களுக்கு மதுதான் காரணம். எனவே மதுவை ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் ஜோயல், நிர்வாகி நிஜாம் உள்பட பலர் உடனிருந்தனர்.

No comments: