Wednesday, November 13, 2013

கார்த்திக், ரம்பா நடித்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் ரீமேக் ஆகிறது


கார்த்திக், ரம்பா ஜோடியாக நடித்த ‘‘உள்ளத்தை அள்ளித்தா’’ படம் ரீமேக் ஆகிறது. இப்படம் 1996–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. சுந்தர்.சி இயக்கி இருந்தார். கவுண்டமணி, மணிவண்ணன், செந்தில், ஜெய்கணேஷ் ஆகியோரும் நடித்து இருந்தனர். முழு நீள காமெடி படமாக வந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற அழகிய லைலா பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இந்த படம் தற்போது ரீமேக் ஆவதால் நடிகர்–நடிகை தேர்வு நடக்கிறது. கார்த்திக் கேரக்டரில் அவரது மகன் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். சுந்தர்.சியே இப்படத்தையும் இயக்குவார் என தெரிகிறது.

No comments: