Wednesday, November 13, 2013

CM Jayalalitha's speech and act

SPEECH தமிழர்களை வஞ்சித்துவிட்டது மத்திய அரசு: முதல்வர் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சித்து விட்டது என்று முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவையின் அவசரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியது: இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க அதிமுக அரசு தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மூன்றாவது முறையாக முதல்வராக நான் பொறுப்பேற்றவுடன், இலங்கைப் பிரச்னை தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் போர்க் குற்றங்களை, இனப் படுகொலையை நடத்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்குமாறு ஐ.நா. சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இலங்கை நாட்டை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்தவும் மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் கடந்த மார்ச்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை முற்றிலுமாக இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி கடந்த 24-ஆம் தேதி பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்தத் தீர்மானங்களுடன், காமன்வெல்த் மாநாட்டினை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கை கடிதங்கள் வாயிலாக இருமுறை வலியுறுத்தி கேட்டுக் கொண்டேன். ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில், கடந்த இரண்டரை ஆண்டுகளில், இலங்கை அரசின் இனப் படுகொலை குறித்து மூன்று தீர்மானங்கள் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், இதுநாள் வரை தமிழர்களுக்கு சாதகமான எந்தவொரு முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மாறாக, காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமருக்கு பதிலாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் பங்கேற்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி. காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் ஒருவர் கூட கலந்து கொள்ளப் போவதில்லை என்ற திடமான, உறுதியான முடிவை இந்திய அரசு எடுக்கும் என்று உலகத் தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தமிழக சட்டப் பேரவையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், மத்திய அரசு மீண்டும் தமிழர்களை வஞ்சித்துவிட்டது என்றார் முதல்வர் ஜெயலலிதா. ACT தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு மண்டப சுற்றுச்சுவர் இடிப்பு இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை போலீசாரின் பாதுகாப்புடன் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினரால் பொக்லைன் இய்ந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. . - Does She thinks people are Fools

No comments: