வரலாறு திரும்புகிறது!
நேதாஜி, தேவரால் உருவாக்கப்பட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தற்போதைய உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.வி.கதிரவன் MLA., அவர்கள் தலைமையில் இன்று 1200க்கும் மேற்ப்பட்டோர் சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.
இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரு.பி.வி.கதிரவன் MLA., அவர்கள் மூன்று பெரும் கோரிக்கையை மத்திய அரசைக்கண்டித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கினார். அவை:
1. நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட கோரி வலியுறுத்தல்.
2. ஜனவரி 23ம் தேதி அன்று நேதாஜியின் பிறந்தநாளை அகில இந்திய தேசபக்தி தினமாக அறிவித்து, அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வலியுறுத்தல்.
3. நேதாஜியின் INA யுத்தத்தில் கலந்து நம் நாட்டிற்காக பல ஆயிரக்கணக்கான உயிர் இழந்தவர்களின் உருவப்படங்களை வெளியிட வலியுறுத்தல்.
மேலும் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த 1200க்கும் மேற்ப்பட்டோர் கைது.
No comments:
Post a Comment