வியாசர்பாடியில் நடந்த கவுதம் கார்த்திக் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் ரங்கூன் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இரு மாதங்களுக்கு முன் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்று காலை வியாசர்பாடி பி.வி.காலனியில் படப்பிடிப்பை நடத்தினர். அங்குள்ள அம்மன் கோவிலில் கவுதம் கார்த்திக் சாமி கும்பிடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்த பகுதியில் பர்மா தமிழர்கள் ஏராளமானோர் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுதம் கார்த்திக் படப்பிடிப்பை காண ஏராளமானோர் அங்கு கூடினார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். படக்குழுவினரிடம் படப்பிடிப்புக்கான அனுமதி கடிதத்தை கேட்டனர். அப்போது அவர்களிடம் அனுமதி கடிதம் இல்லாதது தெரிய வந்தது. கமிஷனர் அலுவலகத்தில் விரைவில் கடிதம் வாங்கி வருகிறோம் என்றனர்.
போலீசார் அதை ஏற்கவில்லை. படப்பிடிப்பு நடத்த தடை விதித்தனர். படப்பிடிப்பு கருவிகளை எடுத்துக் கொண்டு வெளியேறும்படி மகாகவி பாரதிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி அறிவுறுத்தினார். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

No comments:
Post a Comment