Monday, March 19, 2012

வரிப்புலி வைகோவுக்கு அழைப்பு: ‘‘கலைஞர் அழைத்தால் சொரிப்புலிகூட வராது!’’ சீமான் பாய்ச்சல்

அ.தி.மு.க. அணியிலிருந்து ம.தி.மு.க. வெளியேற்றத்துக்குப் பிறகு தமிழுணர்-வாளர்கள் மத்தியில் சலசலப்பும் பரபரப்பும் பற்றிக் கொண்டுள்ளது. ஏற்கனவே கருணாநிதியை மட்டும் எதிர்த்து வந்தவர்கள் இப்போது ஜெயலலிதாவையும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் களத்தையே ம.தி.மு.க. புறக்-கணித்து-விட்ட நிலையில்... ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தலைவர் சீமானின் வியூகத்தில், வேகத்தில் ஏதும் மாற்றம் இருக்குமா என்பதுதான் தமிழுணர்-வாளர்களின் கேள்வி. இந்நிலையில் சீமானை சந்தித்தோம்.

வைகோவை முதன்முதலில் சட்டப்பேரவைத் தேர்தலில் நிற்குமாறு நீங்கள்தான் நேரில் சென்று அழைத்தீர்கள். இன்று ம.தி.மு.க.வின் முடிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மிகுந்த மன வருத்தத்தையும், மனக் காயத்தையும் தருகிற முடிவாக இருக்கிறது. அண்ணன் வைகோ போன்ற நேர்மையாளர், தூய்மையாளருக்கு இந்த அரசியல் களத்தில் ஏற்பட்டிருக்கிற நிலையைப் பார்த்தால், ஒருவகையில் அச்சமாகக் கூட இருக்கிறது. ஐந்து வருடம் கூட்டணியில் இருந்தவரை ஜெயலலிதா வஞ்சித்துவிட்டார்.

வைகோ மீது நடுநிலையாளர்-களும், பொதுப் பிள்ளைகளும் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் இப்போது அவரை எதிர்ப்பவர்-களுக்குக்கூட தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும், அண்ணன் எடுத்த இந்த முடிவு தற்காலிகமானதுதான். அவருடைய ஆற்றலையும் வீச்சையும் நாங்கள் அறிவோம். அவர் இந்தத் தேர்தலை மட்டும்தான் புறக்கணித்திருக்கிறார். மீண்டும் மெருகேறி வருவார்.

ம.தி.மு.க.வின் முடிவால் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தேர்தல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இருக்குமா?

மாற்று அரசியலுக்கான லட்சியப் பயணத்தோடு செல்லும் இயக்கம் நாம் தமிழர் இயக்கம். அண்ணன் வைகோ களத்தில் இருந்திருந்தால் அவரோடு சேர்ந்து போராடியிருப்போம். அவர் இல்லாததால் வருத்தமே தவிர, அதையே நினைத்து கவலைப்பட்டு களத்திலிருந்து பின்வாங்க முடியாது.

என் தமிழினத்தை அழித்த காங்கிரஸை கருவறுக்கும் பணியிலிருந்து எக்காலத்திலும் என்னால் மாற முடியாது. தமிழகத்து உறவுகளும், உலகத்து உறவுகளும், தமிழ்நாட்டில் காங்கி-ரஸை அழிக்கவேண்டியதன் அவசியத்தை எனக்கு தினம்தினம் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தில் காங்கிரஸை தோற்-கடிக்கவில்லையென்றால் தமிழ்நாட்டில் தமிழனே இல்லையென்றுதான் அர்த்தம். அதனால் காங்கிரஸை எதிர்க்கும் வலுவான அணியை ஆதரிக்கும் முடிவில் மாற்றம் இல்லை. அந்த ஆதரவு இரட்டை இலைக்கா, வேறு யாருக்குமா என்பதி-லெல்லாம் என் கவனம் இல்லை.

காங்கிரஸை தோற்கடிக்க சிறப்பு வியூகங்கள் வகுத்திருக்கிறீர்களாமே?

களத்தில் புகும் முன் வியூகங்கள் வகுக்காமல் இருக்க முடியுமா? எங்களது ஆன்றோர் பேரவையை கூட்டி, அதில் சில சிறப்பு வியூகங்கள் பற்றி விவாதித்து முடிவெடுத்திருக்கிறோம். காங்கிரஸ் வேட்பாளர்களை குறிப்பாக, சோனியாவின் மகன் ராகுலின் சிறப்பு அக்கறையின் பேரில் நிறுத்தப்படும் இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஒட்டுமொத்தமாக தோற்கடிக்க உறுதி பூண்டுள்ளோம்.

‘போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர்’ என்று அடிக்கடி சொல்வார் அண்ணன் பிரபாகரன். அந்த வகையில் இது வெறும் தேர்தல் அல்ல. பிரபாகரனின் தம்பிகளுக்கும், சோனியாவின் மகனுக்கும் நடக்கும் ரத்தம் சிந்தாத யுத்தம். தமிழனை கருவறுத்த அந்தக் கட்சியை கருவறுக்க என் தம்பிகள் உறுதிபூண்டுள்ளனர். களத்திலும், கருத்திலும் வலிமையாக செயல்பட்டு கொலைகார காங்கிரஸை ஓட ஓட விரட்டியடிப்போம்.

எதிரணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தை-களும், பா.ம.க.வினரும் உங்கள் நண்பர்கள்-தானே?

அவர்களெல்லாம் என் உடன் பிறந்தோர். இன்று காங்கிரஸை ஆதரிக்கும் அணியில் இருக்கிறார்கள். அவர்களை என்ன செய்யவேண்டும் என்பது என் தம்பிகளுக்குத் தெரியும்.

தமிழின உணர்வாளர்களை ஒன்றி-ணைக்க நீங்கள் திட்டம் தீட்டுவதாக செய்திகள் வருகிறதே...

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய சக்திகளின் பக்கம் தமிழ் உணர்வாளர்கள் பிரிந்து கிடப்பதும், ஐந்து இடங்கள், பத்து இடங்களுக்காக அவர்கள் பின் நிற்கும் இழிநிலையும் 2011 தேர்தலோடு முடிந்துவிடும். இந்த இரு கழகங்களுக்கும் மாற்றாக தமிழ் உணர்வாளர்களை ஒருங்கிணைத்து, கட்டமைத்து பெரும் மாற்று சக்தியாக உருவாக்கும் முயற்சிகளை இந்தத் தேர்தலுக்குப் பிறகு தொடங்க இருக்கிறேன். 2016 தேர்தலில் தமிழர் சக்தி தனிபெரும் சக்தியாக உருவாக்கம் பெற்று, தமிழர் விரோத சக்திகளை வீட்டுக்கு அனுப்பும் நிலைமை உருவாகும். அதற்கான பணியை அயராது ஆற்றுவோம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் பற்றி...

தமிழன் இத்தனை காலமாக கிரைண்டர், மிக்ஸி வாங்க வக்கில்லாதவ-னாகவா இருக்கிறான்? அப்படி இருக்-கிறான் என்றால் அவனை அப்படிப்பட்ட வக்கற்ற நிலைக்கு தள்ளியது இந்த ஆட்சிதானே? தமிழனின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வழியேதும் செய்யாமல் இலவசம், இலவசம் என்று கூறி அவனை திண்ணைச் சோம்பேறியாக்கி தாங்கள் கொழுப்பதற்கான தந்திரம் இது. இலவசம் என்று சொல்லியே ஒரு லட்சம் கோடிக்கு மேலான கடனை தமிழன் தலையில் சுமத்தியிருக்கிறார் கருணாநிதி. எனவே, இதைத் திட்டம் என்று சொல்லக் கூடாது. தமிழனுக்கு நட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

வரிப்புலியே வருக என்று வைகோவை கலைஞர் அழைத்திருக்கிறாரே?

எதற்கு? அந்த வரிப்புலியை அழைத்து மீண்டும் புழலிலோ, வேலூரிலோ போடவா? கருணாநிதி அழைத்தால் ஒரு சொரிப்புலி கூட வராது.

No comments: