Wednesday, March 28, 2012

இந்தியாவுக்கு எதிராக பேசியதாக வழக்கு: டைரக்டர் சீமான் விடுதலை

இலங்கை இறுதி கட்ட போர் காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் போராட்டங்கள் நடந்தன. அப்போது புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவர் மீது புதுவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

புதுவை ஜெயிலில் 80 நாட்கள் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கோர்ட்டில் ஜாமீன் கிடைத்தது. இதனால் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு புதுவை முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி புவனேஸ்வரி இன்று சீமானை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார். அவர் தனது தீர்ப்பில், சீமான் இந்தியா இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை. இலங்கைக்கு எதிராகதான் பேசி இருக்கிறார். இது உணர்வு பூர்வமான பேச்சு. எனவே அவரை விடுதலை செய்கிறேன் என்று கூறினார்.

No comments: