Friday, March 30, 2012

வீடுகளுக்கான மின்கட்டண அறிவிப்பு

தமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயருகிறது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.மின்கட்டண உயர்வின்படி, வீடுகளின் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, 100 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.10 எனவும், 101 முதல் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.80எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 201 முதல் 250 வரை யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் ரூ.3 எனவும், 251 முதல் 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.50 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் 4 பிரிவுகளில் உயர்த்தப்பட்டுள்ளது. 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களில், 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3 எனவும், 201 - 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ரூ. 4 எனவும், 501 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் 5.75 எனவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 37 சதவீதம் வரை இருக்கும் எனவும், இந்த உயர்வு ஓராண்டு வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: