Saturday, October 27, 2012

THEVAR JEYANTHI NEWS


5,000 cops to monitor Thevar Jayanthi in Ramnad


Ahead of Thevar Jayanthi celebrations at Pasumpon village in Ramanathapuram district, the region will be brought under police cover from October 27, given the sensitive nature of the occasion. Over 5,000 policemen across the state are going to be deployed in Ramanathapuram district along with 13 SPs, 50 DSPs and 150 inspectors.
Pasumpon U Muthuramalinga Thevar, a freedom fighter, was born on October 30, 1907. He was also a prominent leader of the Mukkulathors, comprising Kallar, Maravar and Agamudaiyar communities.
After his demise, every year October 30 is celebrated as Thevar Jayanthi during which thousands of people including leaders of various political parties and organizations come and pay homage at his memorial in Pasumpon village.
There is a fear that communal clashes will erupt on the occasion between two groups, the Thevars and the Scheduled Castes.
In 2008, two groups of students clashed on the campus of the Dr Ambedkar Law College, Chennai, over the printing of pamphlets to mark Thevar Jayanthi.
The 105th Thevar Jayanthi falls on Tuesday. Elaborate security arrangements have been made by the district administration for its peaceful conduct.
The district authorities have decided to enforce tight security to ensure law and order. Ramanathapuram's superintendent of police N M Mayilvahanan told TOI that areas in Ramanathapuram district were split into 12 sectors including Ramanad, Kamudhi, Thiruvadanai, Parthibanur, Abiramapuram and Paramakudi and would be given solid security cover.
Six 'Vajras', the anti-riot vehicles, 11 state ambulances and nine fire tenders will be put in important places like Kamuthi, Muthukulatur, Parthibanur and Abiramapuram. Police have been asked to report on October 27, the SP said.
Mayilvahanan also said two parking slots were being readied to ensure smooth traffic, which would be monitored by a separate SP.
"No vehicle without police permit will be allowed to the venue. Travelling on rooftops of vehicles is strictly banned. Carrying of torches and taking out 'Pal kudam' and 'Mulaipari' processions will be allowed only on specified routes on specified days. No public meetings will be allowed between October 28 and 30," the SP said.
The district authorities have decided not to permit posters, flex boards in and around Pasumpon and Kamudhi. Aggrieved by this decision, the All India Forward Bloc's Ramnad district secretary A Suresh filed a writ petition before the high court bench, seeking permission to erect banners and flags across the district.
The petition came up for admission on Thursday before Justice M Duraiswamy. Advocate R Maheswaran appearing for the petitioner told the court that the police had denied permission for banners in and around Pasumpon and Kamudhi where more SC community people live. Instead, they can allow banners outside such villages.

சென்னையில் 30-ந்தேதி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார் 
(WHY NOT TO PASUMPON) ?
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தேவர் திருமகனாரின் 105-வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.45 மணி அளவில் சென்னை நந்தனம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண் பாசறை உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகள், நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்பு களும் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேவர் குரு பூஜை ஊர்வலத்துக்கு கட்டுப்பாடுகள்: ஆட்சியர்


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை ஊர்வலத்தில் விதிமுறைகளை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.
 ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் தேவர் குரு பூஜை விழா ஊர்வலத்தில் செல்வோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் அன்சுல் மிஸ்ரா பேசியதாவது:
 மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊர்வலம் செல்வோர் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஊர்வலத்தை தொடங்கி பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அமைதியாக சென்று சேரவேண்டும். பொதுக்கூட்டத்தை இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டும்.
 ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி கிடையாது. ஒரு தரப்பினர் தேவர்சிலைக்கு மாலை அணிவித்த பிறகே அடுத்த தரப்பினர் மாலையிட அனுமதிக்கப்பட வேண்டும். ஊர்வலத்தில் கலந்து கொள்வோர் வன்முறையில் ஈடுபடவோ, தனியார் மற்றும் அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவோ கூடாது.
 அவ்வாறு சேதம் விளைவித்தால் காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்களில் சாதி, மத, இன உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் மற்றும் கோஷங்களை எழுப்புதல் கூடாது.
 வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்யக்கூடாது. ஆட்சேபகரமான ஒலி எழுப்புவதைத் தவிர்க்க வேண்டும். வாகனங்களில் ஒலி பெருக்கி வைத்திருக்க அனுமதி இல்லை.
 சோதனைச் சாவடிகளில் வாகனங்களை முற்றிலுமாக சோதனையிட வேண்டும். அதில் ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்களாகப் பயன்படுத்தும் சாத்தியம் உள்ள இதர பொருள்களையும், மதுபானங்கள், வெடிபொருள்களை எடுத்துவரவில்லை என்பதை காவல் துறையினர் உறுதி செய்ய வேண்டும்.
 வாகனங்கள் புறப்படும் இடத்தில் மட்டுமல்லாது, வழியில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் சோதனை செய்ய வேண்டும். ஊர்வலம் செல்லும் பாதையில் சிலம்பாட்டம் ஆடக்கூடாது.
 வாகனங்களில் ஆட்சேபனைக்குரிய போஸ்டர்கள், பிரசுரங்கள், பேனர்கள் ஒட்டக்கூடாது. லாரி, டிராக்டர் போன்ற திறந்த வாகனங்களில் விழாவுக்குச் செல்ல அனுமதி கிடையாது. அவ்வாறு திறந்த வானங்களில் செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் வாகனங்களின் அனுமதிச்சீட்டு, தகுதிச் சான்று, பதிவுச் சான்று ஆகியவை ரத்து செய்யப்படும். மேலும் ஓட்டுநரின் உரிமமும் ரத்து செய்யப்படும்.
 நடைபயணமாக பசும்பொன் செல்வதற்கு அனுமதி இல்லை. வாகனங்களில் செல்வோர் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வாகன எண், அதில் பயணிப்போர் விவரத்தை தெரிவித்து அனுமதி பெற்று அதற்கான சான்றினை வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும்.
 பசும்பொன் செல்லும் பாதை: மதுரையில் இருந்து பசும்பொன் செல்பவர்கள் சிலைமான், மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். 
 பசும்பொன்னில் இருந்து திரும்பி வரும்போது கமுதி, கன்னார்பட்டி சந்திப்பு, கீழமராமத்துப்பட்டி, மண்டபசாலை, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ரிங்ரோடு வழியாக மதுரை வரவேண்டும்.
 விழா அமைதியாக நடைபெறுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
 கூட்டத்தில் பார்வர்டு பிளாக், காங்கிரஸ், ஜனதாதளம், ஜனநாயக பார்வர்டு பிளாக், இந்திய கம்யூ., பிஎஸ்பி., வல்லரசு பார்வர்டுபிளாக் உள்ளிட்ட கட்சிகளின் பிரதி நிதிகள், காவல் துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுடனும் ஆட்சியர் தனியாக ஆலோசனை நடத்தினார்.

No comments: