Tuesday, May 7, 2013

'மச்சான்' படத்தில் 18 நடிகர்கள் இடம்பெற்ற பாடல்.


ஷக்கி சிதம்பரத்தின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் மச்சான். இந்த படத்தில் கருணாஸ், விவேக், ஷெரில் பின்டோ, கோவை சரளா, மதுமிதா, வையாபுரி, மயில்சாமி, வெ.ஆ.மூர்த்தி, பாண்டு, ஆர்யன், டி.பி.கஜேந்திரன் மற்றும் ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் முக்கியமான வேடத்தில் இயக்குனர் ஷக்திசிதம்பரம் நடிக்கிறார். ஆர்.கே.ஸ்டுடியோஸ் சார்பில் பாலமுருகன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். அண்மையில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘'மச்சான்,மச்சான்'' எனத் தொடங்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அந்த பாடலில் ரா.பார்த்திபன்,எஸ்.ஜே.சூர்யா,பரத்,விதார்த்,விமல்,ஸ்ரீகாந்த்,விஜய்சேதுபதி,கிருஷ்ணா, சிவா,சாந்தனு,விஜய்அண்டனி,சத்யன்,கோவைசரளா,சூரி,திரு,தம்பி ராமய்யா,பவர் ஸ்டார், ஸ்ரீகாந்த் தேவா ஆகிய 18 நடிகர், நடிகைகள் ஆடிப் பாடி நடித்துள்ளனர்.



படம் குறித்து ஷக்தி சிதம்பரம் கூறியதாவது: வழக்கமாக என் படத்தில் இருக்கும் அனைத்து அம்சங்களும் மச்சான் படத்தில் இருக்கும். இன்று நாடெங்கும் உள்ள பிரச்சனையை இதில் கையாண்டிருக்கிறேன். கல்யாணம் ஆன பிறகு நண்பர்களை வீட்டிற்குள் அனுமதிக்கலாமா, வேண்டாமா ? என்பதுதான். அதில் நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும் என சொல்லியிருக்கிறேன் என்றார்.





No comments: