Monday, May 13, 2013

நீச்சல் அடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் வராது:புதிய ஆய்வில் தகவல்

நீச்சல் பயிற்சி உடலுக்கு நன்மை பயக்கும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நீச்சல் அடிக்கும் குழந்தைகளை ஆஸ்துமா நோய் தாக்காது என்று தகவல் தெரிவிக்கிறது. தாஸ்மானியா பல்கலைக் கழகத்தின் 'பிரீத்வேல் சென்டர்' நிபுணர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.




அதன்படி தண்ணீரில் நீச்சல் அடிப்பதன் மூலம் உடல் நலம் மற்றும் இருதய துடிப்பு சீராகிறது. அதனால் நுரையிரலின் செயல்பாடுகளும் நல்ல நிலைக்கு வைக்கப்படுகிறது. இதனால் 'ஆஸ்துமா' நோய் வராமல் தடுக்கப்படுகிறது.



அல்லது அந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. குறிப்பாக, நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் குழந்தைகள் ஆஸ்துமாநோய் தாக்குதலில் இருந்து தடுக்கப்படுகின்றனர் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: