Tuesday, May 21, 2013

வாட்டி எடுக்கும் மின் தடை அமைச்சர் அறிவிப்பு புஸ்வாணமானது

"மின் தடை பெருமளவு நீங்கியது. சென்னையில், இரண்டு மணி நேர மின் தடை இல்லை' என, அரசு அறிவித்து, இரு நாட்களிலிலேயே, மின் தடை வழக்கம் போல் நடைமுறைக்கு வந்து விட்டது. அனல் மின் நிலையங்களில் பழுது, காற்றாலை மின் உற்பத்தியில் சரிவு ஆகியவற்றால், பழைய நிலைக்கு, மின் தடை திரும்பியுள்ளது என, மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




தமிழகத்தில்,"கத்திரி' வெயில், இம்மாதம், 4ம் தேதி துவங்கியது. "கத்திரி' வெயிலால், சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில், 41 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் தகிக்கிறது.

26.5 கோடி யூனிட் வெப்பநிலை அதிகரிப்பால், தமிழகத்தில் தினசரி மின் நுகர்வின் அளவு, 26.5 கோடி யூனிட் அளவிற்கு உயர்ந்தது. கூடுதல் மின் நுகர்வால், மின் தடை, குறைந்த மின்னழுத்தம் போன்ற பிரச்னைகள் அதிகரித்துள்ளது.



சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், தினசரி, 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை அமலில் உள்ளது. சென்னை மாநகரில், தினமும், இரண்டு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டும், இரவு நேரங்களில், அறிவிக்கப்படாத மின்வெட்டும் தொடருகிறது.இந்த நிலையில், இம்மாதம், 6ம் தேதி, காற்றாலைகளில் இருந்து, 2,500 முதல், 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக, இந்த மின் உற்பத்தி காற்றாலைகளிலிருந்து கிடைத்தும் வந்தது.



காற்றாலை மற்றும் அனல் மின் உற்பத்தி உயர்வால், மொத்த மின் உற்பத்தியும், 11 ஆயிரம் மெகாவாட்டை நெருங்கியது. இதன் காரணமாக, சென்னை உட்பட மாநிலத்தின் பல இடங்களில், மின் தடை நேரம் கணிசமாகக் குறைக்கப்பட்டது.



அறிவிப்புக்கு மறுநாள்... கூடுதல் மின் உற்பத்தியால், "தமிழகத்தில், மின் தடை பெருமளவு குறைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, சென்னை மாநகரில், நடைமுறையில் இருக்கும், இரண்டு மணி நேர மின் தடை முற்றிலும் நீக்கப்பட்டு உள்ளது' என, சட்டசபையில், மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.



இத்தகவலை, எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீது, சட்டசபையில், இம்மாதம், 14ம் தேதி, நடந்த விவாதத்தின் போது, அமைச்சர் தெரிவித்தார். ஆனால், அறிவிப்புக்கு மறுநாள் முதல், தமிழகத்தில் வழக்கம் போல் மின் தடை தொடர்கிறது. தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுதால், 840 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்தது. காற்றாலை மின் உற்பத்தியிலும், சரிவு ஏற்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி, காற்றாலைகள் மூலம், 1,638 மெகாவாட் மின்சாரமே கிடைத்தது. மாநிலத்தின் மொத்த மின் உற்பத்தி, 9,566 மெகாவாட்டாக குறைந்தது. இதனால், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பிறபகுதிகளில், மின் தடை வழக்கம் போல் தொடர்கிறது.



மாவட்டங்களில் நிலவரம் என்ன?



* கடலூரில், இம்மாதம், 14ம் தேதி முதல் முழு அளவில் மின்Œõரம் வழங்கப்பட்டது. நேற்று முன் தினம் முதல், நகர்ப் புறத்தில், ஆறு மணி ‌நேரத்திற்கும் மேலாகவும், கிராமப்புறங்களில், எட்டு மணி நேரத்திற்கும் மேலாகவும் மின் தடை உள்ளது.

* விழுப்புரத்தில், கடந்த ஒரு வாரமாக, முழு நேரம் மின்சாரம் வழங்கப்பட்டது. நேற்று முன் தினம் முதல், நகரப்புறங்களில், தினசரி பகலில், நான்கு மணி நேரமும், இரவில், இரண்டு மணி நேரமும், மின் தடை செய்யப்படுகிறது. இதேபோன்று, கிராமப்புறங்களில், தினசரி பகலில், ஆறு மணி நேரமும், இரவில், இரண்டு மணி நேரமும் மின் தடை ஏற்படுகிறது.

* திருப்பூரில், கடந்த மாதத்தில், 16 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. மின் தடை, ஏழு மணி நேரமாக குறைந்திருந்த நேரத்தில், மீண்டும் மின் தடை நேரம் அதிகரித்து உள்ளது.

* கோவையில், கடந்த மாதம் பகலில், ஏழு மணி நேரம், இரவில் ஆறு மணி நேரம் என, 13 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது. இம்மாதம், 6ம் தேதி முதல், 15ம் தேதி வரை முழு அளவில் மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது, பகலில் ஐந்து மணி நேரம், இரவில் இரண்டு மணி நேரம் என, ஏழு மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.

* மதுரை, நகர்புறப் பகுதிகளில், எட்டு மணி நேரமும், புறநகர் பகுதிகளில், அவ்வவ்போது, மின் தடையும் செய்யப்படுகிறது. இரவில், ஒரு மணி நேரம் இடைவெளியில், மின் தடை ஏற்படுகிறது.

* திண்டுக்கல், நகர் புறங்களில், நான்கு மணி நேரம் மின்தடை உள்ளது. இரவில், ஒரு மணி நேர இடைவெளியில், 3 மணி முதல் 4 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. புறநகர் பகுதிகளில், தினமும், எட்டு மணி நேரம் மின் தடை உள்ளது.

* தேனியில், தினசரி, பகலில், ஆறு மணி நேரமும், இரவில், நான்கு மணி நேரமும் என, 10 மணி நேரம் மின் தடை உள்ளது.

* ராமநாதபுரத்தில், இரு நாட்களாக, மின்தடை நேரம் குறைக்கப்பட்டது. தற்போது, காலை, இரண்டு மணி நேரமும், மதியம், இரண்டு மணி நேரமும், இரவில், இரண்டு மணி நேரமும் என, ஆறு மணி நேரமும், கிராமப்புறங்களில், 10 மணிநேரமும் மின்தடை செய்யப்படுகிறது.

* சிவகங்கையில், ஒரு வாரம் மின்தடை நேரம் குறைந்திருந்தது. நகர் பகுதியில், தினமும், ஆறு முதல் ஏழு மணி நேரமும், கிராமப்புற பகுதிகளில், ஒன்பது முதல், 10 மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது.

* விருதுநகரில், நகர்ப்புறங்களில், ஏழு மணி நேரமும், கிராமப்புறங்களில், 10 முதல் 18 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகிறது. இரவு நேரங்களில், ஒரு மணி @நரத்துக்கு ஒரு முறை மின் தடை செய்யப்படுகிறது.

* நெல்லையில், தினசரி பகலில், நான்கு மணி நேரமும், இரவு நேரத்தில், மூன்று மணிநேரம் என, ஏழு மணிநேரம் மின்வெட்டு நிலவுகிறது.

* தூத்துக்குடியில், நகர் பகுதிகளில், தினமும் இரவு நேரத்தில், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையும், காலையில், நான்கு மணி நேரம், மதியம் இரண்டு மணிநேரம் என மின் தடை நிலவுகிறது.

* கன்னியாகுமரியில், இம்மாதம், 10ம் தேதி முதல், ஆறு நாள் மின்சாரம் முழுமையாக வழங்கப்பட்டது. நேற்று முன் தினம் முதல், இரவில், ஒரு மணி @நரத்துக்கு ஒரு முறையும், பகலில், மூன்று முதல், நான்கு மணி நேரமும் மின் தடை நிலவுகிறது.

* சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில், நேற்று முன் தினம் முதல், பகலில், நான்கு மணி நேரமும், மாலையில், ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி @நரத்துக்கு ஒரு முறை என, 10 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை செய்யப்படுகிறது.



No comments: