Tuesday, December 10, 2013

பி.ஆர்.பி. நிறுவனம்

மதுரை பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு சொந்தமான கிரானைட் குவாரிகளை மூடுமாறு கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்த நிறுவனம், டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நடைபெற்றது. பி.ஆர்.பி. நிறுவனம் சார்பிலான வக்கீல் ஹரிஷ்சால்வே வாதாடுகையில், பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். எந்தவித ஆதாரமும் இல்லாமல் குவாரியை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படவில்லை. தமிழக அரசு தவறாக ஆய்வுகளை நடத்தி உள்ளது. வேண்டுமானால் மத்திய அரசு தலைமையில் ஒரு குழுவை நியமித்து ஆய்வு மேற்கொள்ளலாம். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் பி.ஆர்.பி. நிறுவனமும் ஒன்று. எனவே உடனடியாக குவாரிகளை திறக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

No comments: