Monday, December 9, 2013

விவேக்கும் சுற்று சூழலும்


சுற்று சூழல் பற்றி பல வருஷமாக பேசிக் கொண்டேயிருக்கிறார் நடிகர் விவேக். வெறும் நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல் எல்லா நேரமும் சமூகத்தை பற்றிய அக்கறையும் கொண்டிருக்கிற நடிகராக திகழ்வதுதான் விவேக்கின் ப்ளஸ். அதே நேரத்தில் மைனஸ்சும் கூட. விவேக் படம்னா அட்வைஸ் ஜாஸ்தி இருக்கும் என்று அலுத்துக் கொள்பவர்களும் உண்டு. ஆனால் எது பற்றியும் கவலைப்படாமல் தன் பிரசாரத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருக்கிறார் அவர். தமிழகம் முழுக்க சுற்றி சுழன்று பத்து லட்சம் மரக்கன்றுகளை நட்ட பெருமை விவேக்குக்கு மட்டுமே உரிய சாதனை. இந்த நிலையில் அவர் பால் ஈர்ப்பு கொண்ட கல்லுரி மாணவர்கள் தொடர்ந்து தங்கள் கல்லுரிகளில் பேச அழைக்கிறார்கள். அவரும் நடிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் அதையும் செய்து கொண்டிருக்கிறார் விடாப்பிடியாக. இன்று சென்னையிலிருக்கும் பிரபல கல்லுரியான லயோலா காலேஜில் விவேக் பேச அழைக்கப்பட்டிருக்கிறார். கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு குளோபல் வாமிங். பொறுத்தமான கல்லுரி. பொறுத்தமான விவேக். அவரது பேச்சை நேரில் கேட்க ஆசைப்படுகிறவர்கள் மாலை நான்கு மணிக்கு லயோலா காலேஜுக்கு செல்லலாம்.

No comments: