Wednesday, December 11, 2013

இணைந்து செயல்பட்டால்தான் முழு வெற்றி கிடைக்கும்: கருப்பசாமிபாண்டியன்

திருநெல்வேலி மாவட்டத்தில் திமுகவினர் இணைந்து செயல்பட்டால்தான் மக்களவைத் தேர்தலில் முழு வெற்றியைப் பெற முடியும் என, மாவட்டச் செயலர் வீ.கருப்பசாமி பாண்டியன் கூறினார். திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், டிசம்பர் 27, 28-ஆம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது தொடர்பான திருநெல்வேலி மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அவைத் தலைவர் கிரஹாம்பெல் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால்தான் மக்களவைத் தேர்தலில் முழு வெற்றியைப் பெற முடியும். ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். திமுகவைபோல வெற்றி, தோல்வியை வேறு எந்தக் கட்சியும் சந்தித்ததில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான அணிதான் பலமான கூட்டணி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. தனித்துப் போட்டியிட்டால் 35 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். கூட்டணி அமைத்து சந்தித்தால் நிச்சயம் 25 தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என தலைமையை திருநெல்வேலி மாவட்ட திமுக வலியுறுத்தும். தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் கட்சித் தேர்தலில் தலைமை அறிவிக்கும் எந்தப் பொறுப்பாக இருந்தாலும் ஏற்று பணி செய்வேன் என்றார் அவர். ஏற்காடு தொகுதியில் திமுகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது, ஏற்காடு தொகுதியில் 4 தினங்கள் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டப்பேரவை முன்னாள் தலைவர் இரா. ஆவுடையப்பன், டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பூங்கோதை, மாவட்டப் பொருளாளர் ஷேக்தாவூது, மாவட்ட துணைச் செயலர்கள் நவநீதகிருஷ்ணன், உமாமகேஷ்வரி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ. பிரபாகரன், கா. முத்துராமலிங்கம், மாவட்ட இளைஞரணிச் செயலர் எம்.எஸ்.எஸ். ஜார்ஜ்கோசல், மாநகர இளைஞரணிச் செயலர் எஸ்.வி. சுரேஷ், மாநகர் மாவட்டச் செயலர் மு. அப்துல்வஹாப், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், மாநில மகளிரணி துணைச் செயலர் ராஜம்ஜான், தணிக்கைக்குழு உறுப்பினர் சுப. சீதாராமன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் போர்வெல் கணேசன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் ஜோசப் ஆரோக்கியராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அப்துல்காதர், பத்தமடை பரமசிவம், ஒன்றியச் செயலர்கள் ராமையா, தங்கபாண்டியன், ஆ.க. மணி, பேரூராட்சித் தலைவர்கள் க. இசக்கிபாண்டியன், ஆர். லெட்சுமணன், நகரச் செயலர்கள் கே.கே.சி. பிரபாகரன், சு. முருகன்சுப்பிரமணியன், எஸ்.பி. மாரியப்பன், எம். செல்வராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் துர்கைதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் இரா. ராஜகுமாரி, ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். .

No comments: