Friday, May 27, 2011

சீமானுக்கு மலேசிய துணை முதல்வர் வாழ்த்து

சென்னை, மே 26- தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு, மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோதப் போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்து, அக்கட்சியின் முகத்திரையை கிழித்ததில் நாம் தமிழர் கட்சிக்கும், உங்களுக்கும் உள்ள பங்கை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு உடந்தையாக இருந்த திமுகவும் தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்த ராஜபட்ச மற்றும் ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றவாளிகளே என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தாங்களும் நாம் தமிழர் கட்சியும் முயற்சி எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழகம் வரும் வாய்ப்பு கிடைத்தால், உங்களை கண்டிப்பாக நேரில் சந்திக்கிறேன். உங்கள் தமிழின சேவை என்றும் தொடர உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்.

இவ்வாறு பினாங்கு துணை முதல்வர் ராமசாமி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments: