Friday, May 20, 2011

நடிகர் செந்தில் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை 200க்கும் அதிகமான படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்திருப்பவர் நடிகர் செந்தில். இன்னொரு காமெடி நடிகரான கவுண்டமணியுடன், செந்தில் நடித்த காமெடி காட்சிகள் காலாகாலத்துக்கும் சிரித்து ரசிக்கும் வகையில் இருக்கிறது. சினிமாவில் வாய்ப்பு குறைய ஆரம்பித்தது முதல் அதிமுகவில் இணைந்து அதிமுகவுக்கு ஆதரவான பிரசாரங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று வரும் செந்தில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார்.

இந்நிலையில் செந்திலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூல நோயால் அவதிப்பட்ட அவரை உடனடியாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு செந்திலின் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், ஆபரேஷசன் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. தற்போது நடிகர் செந்தில் நலமுடன் இருப்பதாகவும், ஒரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: