Monday, December 19, 2011

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை: ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் வசித்து வந்தார். சமீபகாலமாக சசிகலா மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று திடீரென சசிகலா மீதும், அவரது குடும்பத்தினரும் மீதும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அ.தி.மு.க.வில் இருந்து அவர்களை விலக்கி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

1. வி.கே.சசிகலா (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்)

2. ம.நடராஜன்

3. திவாகர் (மன்னார்குடி)

4. டி.டி.வி. தினகரன்

5. வி. பாஸ்கரன்

6. வி.எம்.சுதாகரன்

7. டாக்டர் எஸ்.வெங்கடேஷ்

8. எம்.ராமச்சந்திரன்

9. ராவணன்

10. மோகன் (அடையாறு)

11. குலோத்துங்கன்

12. ராஜராஜன்

13. மகாதேவன்

14. தங்கமணி

ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

No comments: