Saturday, December 31, 2011

மணிரத்னம் படத்தில் அக்ஷரா?

ராவணன் படத்துக்குப்பிறகு மணிரத்னம் இயக்கும் படம் பூக்கடை. இந்த படத்தில் கார்த்திக்கின் மகன் கெளதம் நடிப்பதாக உறுதியாகி விட்டது. அவருடன் அர்ஜூன், பசுபதி, லால் உள்ளிட்ட சில முக்கிய நடிகர்களும் நடிக்கிறார்கள்.

ஆனால் கதாநாயகி விசயத்தில் ரொம்ப குழப்பத்தில் இருந்து வருகிறார் மணிரத்னம். லட்சுமி மஞ்சு என்ற புதுமுக நடிகையை ஏற்கனவே புக் பண்ணி விட்டவர், படத்தின் முக்கிய நாயகி வேடத்துக்கு தொடர்ந்து கமல் மகள் அக்சராவை அழைத்து வருகிறார். டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் அவர் இருப்பதால் பூக்கடை படத்தின் நாயகி ஆவதா? வேண்டாமா? என்று தனது முடிவை சொல்லாமல் இழுத்தடித்து வருகிறார். இருப்பினும் அக்சராவை நடிக்க வைத்தே தீருவது என்று கடைசிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் மணிரத்னம்.

No comments: