Friday, December 30, 2011

அசம்பாவிதங்களை தடுக்க "ஹெல்ப் லைன்' எண்

துரை:ரயில்களில் அம்பாவிதங்களை தடுக்க கட்டணமில்லா "ஹெல்ப் லைன்' மொபைல் போன் (எண்: 99625 00500) குறித்து ரயில்வே போலீசார் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ரயில்வே போலீஸ் மற்றும் வோடோ போன் நிறுவனம் இணைந்து இந்த எண்ணை ஒதுக்கியுள்ளன. தெற்கு ரயில்வேயில் எப்பகுதியில் ரயில்களில் ஏதாவது பிரச்னை எனில் இந்த எண்ணில் பயணிகள் தகவல் தெரிவித்தால், அங்கிருந்து ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, சம்பவயிடத்திற்கு விரைவர். இதன் மூலம் அசம்பாவிதங்களை தவிர்க்க வாய்ப்பு ஏற்படும்.இந்த எண் குறித்து ரயில்வே ஸ்டேஷனில் நேற்று டி.எஸ்.பி., விநாயகம், வோடோபோன் நிறுவன இயக்குனர் நூருல் ருதா, எஸ்.ஐ.,க்கள் கண்ணன், விமலா, சிவகாமி மற்றும் போலீசார், பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்டிக்கர்களை ஸ்டேஷன் மற்றும் ரயில் பெட்டிகளில் ஒட்டினர்.

No comments: