Wednesday, April 4, 2012

மன்னார்குடி- திருச்சி பாசஞ்சர் ரெயில் மானாமதுரை வரை நீட்டிக்கப்படுகிறது: டி.ஆர்.பாலு கோரிக்கை ஏற்பு

மன்னார்குடியிலிருந்து திருச்சி வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் நாளை மறுநாள் முதல் மானாமதுரைவரை நீட்டிக்கப்படுகிறது. ரெயில்வே நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் டி.ஆர். பாலுவின் கோரிக்கையை ஏற்று சென்ற மாதம் தாக்கல் செய்யப்பட்ட ரெயில்வே பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், டி.ஆர். பாலுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ரெயில்வே மந்திரி முகுல்ராய், இந்த ரெயில் வரும் 6-ந்தேதி முதல் மானாமதுரை வரை நீட்டிப்பு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை 4 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்த இந்த ரெயில், கூடுதலாக மேலும் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 8 பெட்டிகளுடன் இயங்க உள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக இத்தகைய டெமுரக பயணிகள் ரெயிலில் கழிவறையும் இணைக்கப்பட்டு இயக்கப்பட விருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரெயில் தினசரி காலை 6.30 மணிக்கு மன்னார் குடியிலிருந்து புறப்பட்டு, காலை 9.45 மணிக்கு திருச்சி சென்றடையும். அங்கிருந்து மானாமதுரைக்கு இந்த ரெயில் பிற்பகல் 1.20 மணிக்கு சென்று சேரும். மறு மார்க்கத்தில் மானாமதுரையிலிருந்து பிற்பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருச்சிக்கும் இரவு 8 மணிக்கு மன்னார்குடிக்கும் சென்றடையும்.

இந்த தகவலை டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார்.

No comments: