Thursday, April 5, 2012

கள்ளர் ஜாரி நிலம் விற்பனை வாங்கியவர்கள் கணக்கெடுப்பு

தேனி:கள்ளர் ஜாரி நிலத்தை வாங்கிய வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் கள்ளர் ஜாரி நிலங்கள் உள்ளன. இவற்றை கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் விலைக்கு வாங்க கூடாது, என சட்டத்தில் தடை உள்ளது. ஆனாலும் பெரும்பாலான நிலங்களை வேறு சமுதாயத்திற்கு விற்பனை செய்து விட்டனர்.இப்படி முறைகேடாக கள்ளர்ஜாரி நிலங்களை வாங்கியவர்களுக்கு, வி.ஏ.ஓ.,க்கள் பட்டா மாறுதலும் வழங்கி உள்ளனர். இந்த நிலங்களை மீட்கப்போவதாக ஒரு குழுவினர் கூறி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதனை தொடர்ந்து கள்ளர் ஜாரி நிலம் வாங்கியவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

No comments: