Thursday, May 3, 2012

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 22ம் தேதி வெளியாகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கி, மார்ச் 30ம் தேதி முடிவடைந்தன. மொத்தம் 1,874 மையங்களில், 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தனித் தேர்வர்களாக 61 ஆயிரத்து 319 பேர் பங்கேற்றனர்.




மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி முடிவடைந்துள்ள நிலையில், இம்மாதம் 22-ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. மதிப்பெண்களை கணிணியில் பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



கடந்த வருடம் மே 9ம் தேதியே பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தன. இம்முறை தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாவதால், பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வும் தாமதாகும் எனத் தெரிகிறது. எனவே கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பும் தாமதமாக துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: