Monday, May 21, 2012

பாரதிராஜா-கங்கை அமரன் இணைகிறார்கள்

அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தைப் பற்றி போதிய அளவிற்கு நாம் செய்திகள் போட்டாகிவிட்டது. எனவே படத்தைப் பற்றி மேலும் புதிதாக சொல்ல எதுவும் இல்லை.






ஆனால், இப்படத்தில் சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ஒரு ஜோடியைப் பற்றி இங்கு கூறுகிறோம்.





இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என்று பல முகங்களைக் கொண்டுள்ள கங்கை அமரன், பாரதிராஜாவின் படத்தில் பாடல் எழுதுகிறார். இப்படத்திற்கு ஜி.பி. பிரகாஷ் இசையமைக்க, பாடல்களுக்கு அழகான வரிகளை அமைக்கும் பணியில் கங்கை அமரன் ஈடுபட்டு வருகிறார்.





சுமார் 1990ம் ஆண்டு என்னுயிர் தோழன் என்ற படத்தில் பாரதிராஜாவின் படத்திற்கு கங்கை அமரன் பாடல் எழுதியதற்குப் பிறகு 22 ஆண்டுகள் கழித்து அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் இவர்கள் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments: