Monday, May 21, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு- டாக்டர் சேதுராமன்

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.




இதுகுறித்து மூவேந்தர் முன்னணி கழக நிர்வாகக் குழு கூட்டம் தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் பொதுச்செயலாளர் இசக்கிமுத்து முன்னிலையில் நடந்தது. இதில் எடுத்த முடிவுபடி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.



புதுக்கோட்டை தேர்தல் பணிக்குழு மாநில அமைப்பு செயலாளர் தியூர் கண்ணன் தலைமையில் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடந்து வருவதாகவும் டாக்டர் சேதுராமன் அறிக்கையில் கூறி உள்ளார்.

No comments: