Thursday, May 10, 2012

MESSSAGE FROM MR.THANIYAN

புதிய மத-மானமாற்றம், புதிய வீடு, நிலம், படிப்பு, பதவி, பணம், புகழ், பொறுப்பு, வியாபாரம், கல்வி, அதிகாரம், சொகுசு என எதனையும் கிடைக்காத அன்றைய தாழ்த்தப்பட்ட கூட்டம், மக்களாட்சி அடிப்படையில், அரசியல் அங்கீகாரம் மூலம் இன்று வாய்ப்பு கிடைக்கும் போது அதை இறுகப்பற்றிக் கொண்டு மென்மேலும் உழைத்து, ஒற்றுமையுடன் இருந்து, மென்மேலும் பல சேர்த்து புதுப்புது (பொய்)வரலாறு எழுதி, பதிந்து, புத்தகம் வெளியிட்டு, சுவரொட்டி ஒட்டி, கூட்டம் நடத்தி, அரசு மற்றும் அரசு சாராத நிறுவங்களில் சாதி சார்ந்த அமைப்புகளை நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் சேர்ந்து எ.கா. சாணார் மற்றும் அட்டவணை பிரிவினர், நாங்கள் செய்தால் அது தவறல்ல, சாதி வெறியல்ல; குலப்பற்றல்ல, எங்களை எங்கள் கூட்டம், தமிழ் சமூகம் மற்றும் சட்டம் காக்க வேண்டும் ஆனால் மற்றவர்கள் செய்தால் அது ஆதிக்க சாதிவெறி, வன்கொடுமை, தீண்டாமை அது இது என்று புலம்புவதை கண்முன் பார்க்கிறோம்.




நாம் மன்னர் இனம், அவர் பரம்பரை இவர் பரம்பரை என்று பழம்பெருமை [மட்டும்] பேசிக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை வந்தேறிகளிடம் கொடுத்துவிட்டோம், மதுரையின் மையத்தில் கட்டபொம்மன் சிலை, பெரியார் [ஈ.வே.ராமசாமி] நிலையம், முதுகுளத்தூரில் (தொடர்பே இல்லாமல்) சுந்தரலிங்கம் சிலை எல்லாம், ஆனால் தேவர் பெயரைக் கூட வைக்க முடியாத அளவுக்கு தான் இன்று நம் இனம், நம் சமூகம், நம் கூட்டம் எல்லாம் இருக்கின்றது. எத்தனை போராட்டங்கள் செய்தாலும் எவனும் எதுவும் செய்யவில்லை. கேட்டால் இரண்டு கோடி, மூன்று கோடி நாங்கள் என்று வாய் சவடால் விடுவது தேர்தலுக்கு ஓட்டு போட மட்டுமே பயன்படுகிறது. பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால் வ.உ.சி பெயர் சூட்டல் மட்டும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதற்கெல்லாம் நாமே அதற்கு வழி வகைகள் செய்தால் தான் உண்டு. இது உண்மை, கற்பனை அல்ல. நமக்கு முன்னே இருந்த பெரியோர்களிடம் சுய சாதி அபிமானம் மட்டுமே இருந்ததாலும், வரலாறு தெரியாமல், உண்மை புரியாமல், உள்ளன்பு இல்லாமல், மற்றவர்களை மதிக்காமல், எல்லோரும் ஒன்று என்று வெறும் நடிப்பு மட்டும் இருந்ததும் தான் இதற்கு எல்லாம் காரணம். நாம் இதை கவனமுடன் களைய வேண்டும். இது ஒரு எச்சரிக்கை பதிவு. சுய மதிப்பீட்டுப்பதிவு. செயல்கள்முக்கியம். செயல்களை மட்டுமே வரலாறு பேசும். இல்லையேல் கூச்சல் மட்டுமே மிஞ்சும்.



முக்குலத்தோர் தமிழ் மன்னர் குடி, ஆண்ட குடி.வீரமும் தமிழும் இவர்களின் பொது அடையாளம்.பெருமை கொண்டு, உள்ளன்பு கொண்டு, (துரோகம் கெடுத்து ) பங்களியாய் மாறுவோம். மற்ற அனைவரையும் விட இந்த மண்ணை வழிநடத்திய பெரும்பேருக்கு சொந்தமான இந்த இனம் என்பதில் அனைவரும் ஒன்று சேர்வோம். ஒற்றுமை கொள்வோம்.சேர்ந்து கூடி திறம் கூட்டி செயல்கள் செய்து முன்னேறுவோம். நம்மால் நம் (தமிழ்) சமூகம் நலம் பெரும்.



வீரிய உண்மையையும், பிரிவுகளை உணர்ந்து பிரிவினைகளை தவிர்த்து ஒற்றுமையும், உழைப்பும், வெற்றியும் தேவைப்படுகிறது.



குறைகளை மட்டும் சொல்வது நமது நோக்கமல்ல. குறைகளை மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் வேக்காடுத் தனமும் நமக்கில்லை. அதே நேரத்தில் நிகழ் காலத்தில் நாம் முன்னேறாமல் இருக்க காரணமாக இருக்கும் காரணிகளை நாம் கண்டிப்பாக நேர்மையாக தெரிந்து கொண்டு அதை களைய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நம்மில் ஒற்றுமை இல்லை என்பதற்கு பல பல அரசியல் கட்சிகளின் விசுவாசம் ஒரு காரணமாக இருந்தாலும், ஒற்றுமை இல்லாமல் இருப்பதற்கு தன கூட்டத்தை மட்டும் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கு சுயநல குறுக்கு முதன்மையான ஒரு காரணம் என்பதையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.



பெருமை கொள்வது ஒரு புறம் இருந்தாலும் அப்பெருமை ஒற்றுமைக்கு எதிராக இருந்தால் நாம் இன்னும் பக்கவப்பட வேண்டும் என்பது தான் உண்மை. அதற்கு தான் வரலாற்றுத் தெளிவும், ஆன்மீகத் தெளிவும், வீர விவேக நடவடிக்கை தெளிவும் நமக்கு தேவைப்படுகிறது. முன்னேற வேண்டுமானால் பிரிவுகளை அதன் வீரியத்தை உணர்ந்து அதே நேரத்தில் நம்மில் பிரிவினைகளை தவிர்க்கும் ஒற்றுமையும், உழைப்பும், வெற்றியும் தேவைப்படுகிறது.



உண்மை உணர்வோம். உழைப்பில் தெளிவு சேர்த்து வெற்றி நமதாக்குவோம்.

No comments: