Monday, July 15, 2013

ஒரு லிட்டர் விலை ரூ.73.60 ஆனது: 6 வாரங்களில் 4–வது முறையாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.95 உயர்வு; நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

பெட்ரோல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச சந்தை விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு இதனால் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 6 வாரங்களாக பெட்ரோல் விலை குறையவில்லை. உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. லிட்டருக்கு ஒரு ரூபாய் 55 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. வழக்கப்படி 16–ந்தேதி தான் உயர்த்த வேண்டும். ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு நாள் முன்னதாகவே உயர்த்தி விட்டன. சென்னையில் ரூ.1.95 உயர்வு இந்த விலை மாநிலங்களில் உள்ள விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரிக்கு ஏற்ப மாறுபடும். அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 95 காசுகள் உயர்ந்தது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.65–ல் இருந்து ரூ.73.60 ஆக அதிகரித்தது. இதேபோல் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.1.86 உயர்ந்தது. இதனால் அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.68.58–ல் இருந்து ரூ.70.44 ஆனது. அதேபோல கொல்கத்தாவில் ரூ.1.92 உயர்ந்து ஒரு லிட்டர் விலை ரூ.77.76 ஆனது. மும்பையில் ரூ.1.94 உயர்ந்து ஒரு லிட்டர் விலை ரூ.77.73 ஆனது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 4–வது தடவை பெட்ரோல் விலை உயர்த்தப்படுவது கடந்த 6 வாரங்களில் இது 4–வது தடவை ஆகும். ஜூன் 1–ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும், ஜூன் 16–ந்தேதி 2 ரூபாயும், ஜூன் 29–ந்தேதி ஒரு ரூபாய் 82 காசுகளும் உயர்ந்தது. இப்போது 4–வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பெட்ரோல் விலை 4 முறை குறைந்தது. அந்த குறைக்கப்பட்ட விலை, இந்த விலை உயர்வின் மூலம் சரிக்கட்டப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கே சென்று விட்டது.

No comments: