Tuesday, July 9, 2013

பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்-வேலை வழங்காததை கண்டித்து சாலை மறியல்

பெட்ரோல் குண்டு வீச்சு: கடந்த பசும்பொன் ஸ்ரீ தேவர் திருமகனார் குருபூஜைக்கு சென்று திரும்பிய புளியங்குளம் கிராம இளைஞர்கள் மீது பள்ளர் என்று அழைக்கபடும் தலித் சாதியினர் பெட்ரோல் குண்டெறிந்து தாக்குதல் நடத்தினர் .இந்த தாக்குதலில் 19 பேர் தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் 12 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். வேலை கேட்டு மனு : இந்நிலையில் உடல் முழுவதும் தீக்காயம் பட்டு வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 10 பேருக்கு அரசு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர் .குறிப்பாக இணையதள நண்பர்கள் ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்டுள்ள “தேவரின இளம்புலிகள் ” எனும் அமைப்பினர் இரண்டு முறை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் வேலை வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனால் மனுவிற்கு எந்த பதிலும் இதுவரை வராத நிலையே உள்ளது. சாலை மறியல்: இந்நிலையில் இன்று காலை புளியங்குளம் கிராமத்தில் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மற்றும் தேவரின இளம்புலிகள் அமைப்பினர் இணைந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதனை அறிந்த காவல் துறையினர் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதற்க்கு உடன்படாத பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் 2மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து முடங்கியது.பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட போராட்டம் கைவிடப்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு சி.சுப்பிரமணியிடம் மேலும் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது .

No comments: