Tuesday, July 9, 2013

இயக்குனர் ராசு மதுரவன் மரணம்

தமிழ் திரைப்பட இயக்குநர் ராசு மதுரவன் சென்னை மருத்துவமனையில் இன்று காலமானார். மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, பூமகள் ஊர்வலம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானார் ராசு மதுரவன். கிராமத்து கதைகள், குடும்ப உறவுகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை ராசு மதுரவன் இயக்கியுள்ளார். இவருக்கு புற்றுநோய் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராசு மதுரவன் இன்று காலமானார்

No comments: