Monday, February 24, 2014

'ஆண்ட வம்சம்' ஆவணப்பட வெளியீட்டு விழா: இயக்குனர் பாரதிராஜா–கருணாஸ் பங்கேற்பு - DELAYED NEWS


மதுரையை சேர்ந்த ரத்தினசாமி பிரமலைக் கள்ளர் வம்சாவழியும், வழிபாட்டு முறையையும் விளக்கும் வகையில் ‘ஆண்ட வம்சம்’ என்ற தலைப்பில் ஆவணப்படம் இயக்கி தயாரித்துள்ளார். இந்த ஆவணப்பட வெளியீட்டு விழா மதுரை–தேனி மெயின் ரோட்டில் உள்ள மாஸ்டர் மகாலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். மேயர் ராஜன்செல்லப்பா முன்னிலை வகிக்கிறார். என்ஜினீயர் சுருளிவளவன் வரவேற்று பேசுகிறார். இயக்குனர் பாரதிராஜா ஆண்ட வம்சம் ஆவணப் படத்தை வெளியிட நடிகர் கருணாஸ் பெற்றுக் கொள்கிறார். விழாவில் திரைப்பட நடிகர்கள்–இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பிரபல எழுத்தாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். ஆவணப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான ரத்தினசாமி விளக்கவுரை ஆற்றுகிறார். முடிவில் முன்னாள் கவுன்சிலர் ராமன் நன்றி கூறுகிறார்.

No comments: