Thursday, February 27, 2014

sridhar vaandiyar


சின்னமருது ஸ்ரீதர் வாண்டையார் அவர்களை ஏன் தேவரினம் ஆதரிக்க வேண்டும் ... தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேவர் ஜெயந்தியை உலகறிய சீரும் சிறப்புமாய் நடத்தி தேவர் கொள்கையில் வாழ்பவர்.. பிற்படுதபட்டவர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ஆகியோருக்கு அவரவர் வாழும் இடங்களிலேயே தங்கு தடையின்றி சாதி சான்றிதழ் பெற ஆணை பெற்று தந்தவர். வெள்ளம் மற்றும் புயல் காலங்களில் கடலூர் மாவட்டத்தின் பெரும்பகுதிக்கு அன்னமிட்டு ஆதரவு இடம் தந்து அரவணைத்து காத்து நிற்பவர்.. தமிழை போற்றி வளர்க்கும் விதமாக நற்றமிழ் ஆசான் நாவலர் பண்டிதர் நாட்டார் அய்யா, அரித்துவாரமங்கலம் ரெகுநாத ராசளியர் ஆகியோருக்கு விழா எடுத்து புகழஞ்சலி செலுத்தும் உத்தமர். தேவர் ஜெயந்திக்கு 144 தடை உத்தரவு போட்ட பொது எதிர்த்து நின்று வீர முழக்கமிட்டு வெற்றி வாகை சூடியவர் தனது சுய லாபத்திற்காகவும் சொந்த வளர்சிகாகவும் கட்சியையும் தன இன மக்களையும் ஒரு போதும் பயன்படுதிடாதவர். தமிழகத்தின் தென்கோடியில் இராமநாதபுரத்தில் உள்ள ஒரு தேவனுக்கு பிரச்சினை என்றாலும் உடனே செயலற்றகூடிய உண்மை தலைவர் தேவரின மக்கள் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் காண இரவு பகல் பாராமல் ஓய்வறியாது உழைத்து கொண்டிருக்கும் மாமனிதர். சமுதாய முன்னேற்றம் ஒன்றே தன வாழ்வின் பிறவி பலன் என எண்ணி இனத்திற்கு தொண்டாற்றி வரும் உண்மை தொண்டர். தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி கொண்டிருக்கும் ஒப்பற்ற தலைவர்.. காவிரி நதி நீருக்காக சீர்காழி கொள்ளிடத்திலிருந்து கல்லணை வரை நடைபயணம் மேற்கொண்ட நாயகர்.. முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு கொள்ளளவை 142 அடியாக உயர்த்தி தேனி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் காக்க வலியுறுத்தி வரும் வரலாற்று நாயகர்.. கள்ளர் மறவர் அகமுடையோரை இணைத்து தேவரினமாக அறிவித்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு தந்து கல்வி வேலைவாய்ப்பு வழங்கிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் மாபெரும் தலைவர்.. தான் பிறந்த முக்குலதோடு எக்குலதவரயும் வாழவைத்து அரவணைக்கும் அன்பு தலைவர் இத்தகைய குணநலன்கள் பொருந்திய மாமனிதரை காண்பதரிது.. எனவே தேவரினம் மட்டுமல்லாது தமிழக மக்கள் யாவரும் சின்னமருது ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரவு தந்திட வேண்டும்..

No comments: