Saturday, January 5, 2013

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் 144 தடை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை அமைப்பு கலந் தாய்வு கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், பரமக்குடி நகராட்சி பகுதியில் தேவர் குருபூஜையையட்டி நடந்த வன்முறை காரணமாக கடந்த நவம்பர் 1-ந் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

2 மாத காலம் அமலில் இந்த தடை உத்தரவு கடந்த 1-ந் தேதி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று ராமநாதபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தலைமையில் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை அமைப்பு சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டது. 

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறை கேடாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று கோரி இந்த கூட்டம் நடை பெறுவதாக இருந்தது.

இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பிறப்பித்துள் ளார்.

இதனை அடுத்து ராமநாதபுரத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவையின் கலந்தாய்வு கூட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. 

சாதி மோதல்கள், கலவரம் போன்ற பதற்றமான சூழ்நிலை உருவாகாமல் இருப்பதற்காக மேற்கண்ட அமைப்பில் உள்ள அனைத்து கட்சியினர் மற்றும் அமைப்பினர்களும் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழையவும் நிகழ்ச்சிகள் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்த ஒரு சாதி ரீதியிலான அமைப்பினரும் உள்ளரங்கு மற்றும் பொது கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments: