Tuesday, January 15, 2013

KADAL

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கடல்’ படத்தின் நடிகர், நடிகைகள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கவிஞர் வைரமுத்து, நடிகர், நடிகைகள் கௌதம், துளசி, ராதா, கார்த்திக், சுகாசினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அர்ஜுனும், சுகாசினினும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில் கடல் படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. கார்த்திக் தனது மகனான கவுதமை அறிமுகப்படுத்தினார். இயக்குனர் மணிரத்னம் நடிகை துளசியை அறிமுகப்படுத்தினார்.

விழாவில் பங்கேற்று கார்த்திக் பேசும்போது, நானும் ராதாவும் பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமானோம். எங்கள் வாரிசுகள் மணிரத்னம் இயக்கத்தில் அறிமுகமாகிறார்கள். அரவிந்த் சாமி என்னிடம் ஏன் நீங்க படப்பிடிப்புக்கு வரவில்லை என்று கேட்டார். நீங்க அவ்ளோ பேர் இருக்கீங்க. நீங்க பார்த்துப்பீங்க என்று சொன்னேன். 

இவ்வாறு அவர் பேசினார். 

அர்ஜுன் பேசும்போது, கார்த்திக் கவுதம் கதையை உள்வாங்கி நடிக்கக்கூடிய ஒரு திறமையான நடிகர் என கூறினார். மணிரத்னம் பேசும்போது, கவுதமை பார்த்தவுடனேயே எனக்கு என்னுடைய படத்தில் நடிக்க கதாநாயகன் கிடைச்சிட்டாருன்னு தோணிடுச்சு என்று கூறினார். 

மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து ஆகியோரின் 20 வருஷ கூட்டணி குறித்து எப்படி உணர்கிறீர்கள்? என்று வைரமுத்துவிடம் சுகாசினி கேட்டதற்கு அவர் கூறும்போது, இது சந்தர்ப்பவாத கூட்டணி இல்லை. 5 வருடங்களுக்கு ஒருமுறை மாறுகிற கூட்டணி அல்ல. இது சங்கீத கூட்டணி. இந்த படத்தில் 3 பாடல்கள் எழுதியிருக்கிறேன். மூன்று பாடல்களுமே என் கவிதைகளிலிருந்து எடுத்தவைதான் என்று கூறினார். 

ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் தனக்கு குரு என்று கூறினார். மேடையில் தனக்கு பிடித்த மூன்று பாடல்களை பியானோவில் வாசித்தார். இறுதியில் கவுதம், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.










Debutant Tamil actor Gautham Karthik, who will be seen in Mani Ratnam's romantic-drama Kadal, is happy that viewers have accepted him and sends them a heartfelt thanks.

"You all are so kind to have accepted me. I don't think I can begin to express how happy I feel. Thank you all for making this special," tweeted Gautham, son of Tamil actor Karthik.

Gautham is paired opposite Thulasi Nair, another debutant and daughter of Tamil actress Radha, in the film, which is written, directed and produced by Ratnam.

"Kadal", set against the lives of Christian fishermen, is coming out Feb 1. It also features Arvind Swamy, Arjun, Lakshmi Manchu and Thambi Ramaiah in important roles.

A.R. Rahman has composed the music for the film, which has cinematography by Rajiv Menon and editing by Sreekar Prasad.

The cast and crew are currently in Kerala giving finishing touches to the film. "Off to Kerala for 'Kadal' patch work! Yay I get to shoot for 'Kadal' again," tweeted Thulasi.

No comments: