Monday, February 27, 2012

84வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! ஹூகோ, தி ஆர்ட்டிஸ்ட் படங்களுக்கு 5விருது!!

சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்தது. இதில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர். விருதுகள் விபரம் வருமாறு...

* ஹூகோ படத்திற்கு 5 விருது : ஹூகோ படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு, கலை, விஷூவல் எபக்ட்ஸ், சவுண்ட் மிக்சிங் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருது கிடைத்தது.

* தி ஆர்ட்டிஸ்ட் படத்திற்கும் 5 விருது : ஹூகோ படத்தை போன்று தி ஆர்ட்டிஸ்ட் படத்திற்கு 5 விருதுகள் கிடைத்ததுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த படம், இயக்குநர், இசையமைப்பு, ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.


* சிறந்த இயக்குநருக்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்திற்காக மைக்கேல் ஹசானாவிசியஸ்க்கு கிடைத்தது.


* சிறந்த படத்திற்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்திற்கு கிடைத்துள்ளது.


* சிறந்த நடிகருக்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்தில் நடித்த ஜீன் துஜார்தினுக்கு கிடைத்தது.


* சிறந்த நடிகைக்கான விருது, "தி அயன் லேடி" என்ற படத்தில் நடித்த மெரில் ஸ்ட்ரீப்க்கு கிடைத்தது.


* சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருது ஈரானின், "ஏ ஷெப்ரேஷன்" என்ற படத்திற்கு கிடைத்தது.


* சிறந்த துணை நடிகருக்கான விருதை, "பிகினர்ஸ்" படத்தில் நடித்த 82வயதான கிறிஸ்டோபர் பிளம்பர் பெற்றார். இவர் வெல்லும் முதல் ஆஸ்கர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.


* சிறந்த துணை நடிகைக்கான விருது, "தி ஹெல்ப்" படத்தில் நடித்த ஆக்டிவா ஸ்பென்சருக்கு கிடைத்தது.


* சிறந்த விஷூவல் ‌எபெக்ட்ஸ் விருதுக்கான விருது ஹூகோ படத்திற்கு கிடைத்தது.


* சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது, "ராங்கோ" படத்திற்கு கிடைத்தது.


* சிறந்த ஆவணப்படத்திற்கான விருது, "அன்டிபிட்டடு" படத்திற்கு கிடைத்தது.


* சிறந்த படத்தொகுப்புக்கான விருது, "தி கேர்ள் வித் தி டிராகன் டாட்டூ" என்ற படத்திற்காக கிரிக் பாக்ஸ்டர் மற்றும் அங்கூஸ் வால் ஆகி‌யோருக்கு கிடைத்தது.


* சிறந்த இசையமைப்பாளருக்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்தில் இசையமைத்த லூடுவிக்கிற்கு கிடைத்தது.


* சிறந்த திரைக்கதைக்கான விருது, "மிட்நைட் இன் பாரிஸ்" என்ற படத்திற்காக உட்டி ஆலனுக்கும், "தி டிஸடண்டன்ஸ்" என்ற படத்திற்காக அலெக்ஸாண்டர் பயினி ஆகிய இருவருக்கும் கிடைத்தது.

No comments: