Monday, February 6, 2012

BHEL-ல் நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெயினி பணி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BHEL-ல் நிறுவனத்தில் காலியாகவுள்ள இன்ஜினியர் டிரெயினி பணிக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணியின் பெயர்: Engineers Trainee

துறை வாரியான காலியிடங்கள் விவரம்:

1.மெக்கானிக்கல் -550

2. எலக்ட்ரிக்கல் -175

3.எலக்ட்ரானிக்ஸ் -75

கல்வித்தகுதி: AICTE அங்கீராம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல, எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் பி.இ, பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பி.இ, பி.டெக் பட்டதாரிகள் 27 வயததிற்குள் இருக்க வேண்டும். எம்.இ, எம்.டெக், எம்பிஏ பட்டம் பெற்றவர்கள் 29 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயதுவரம்பானது 01.08.2012 அன்று உள்ளபடி கணக்கிடப்படும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 3 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுதிறனாளிகளுக்கு 10 வருடங்களும் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் GATE-12 நுழைத்தேர்வில்பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

GATE-12 தேர்வு நடைபெறும் நாள்: 12.02.2012.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ''Power Jyoti A/C.:30989466064 '' என்ற முகவரிக்கு ஏதாவது ஒரு SBI வங்கி கிளையில் பணமாக செலுத்தவும். SC/ST/PH பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் GATE-12 நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். GATE நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் www.careers.bhel.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்ப பதிவு எண்ணுடன் கூடிய விண்ணப்பித்த விவரங்கள் அடங்கிய பதிவிறக்க நகல் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை தபாலில் அனுப்ப கடைசி நாள்: 22.02.2012.

மேலும் விவரங்களுக்கு www.careers.bhel.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments: