Thursday, December 11, 2014

விக்ரம் பிரபு-விஜய் இணைந்திருக்கும் படத்தின் பெயர் இது என்ன மாயம்

திருமணத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய், விக்ரம் பிரபுவை வைத்து படம் இயக்கி வருகிறார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் அம்பிகா, ராதிகா உள்ளிட்டோர் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்.

பெயரிப்படாமல் படப்பிடிப்பை நடத்தி வந்த இப்படக்குழுவினர், தற்போது இப்படத்திற்கு ‘இது என்ன மாயம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விஜய்யுடன் இணைந்து இவர் இசையமைப்பது 7-வது படமாகும். நீரவ் ஷா ஒளிப்பதிவை கவனித்து வருகிறார்.

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வெள்ளக்காரதுரை’  இம்மாதம் 25-ம் தேதி வெளியாகவுள்ளது.



No comments: